சொர்க்கச் சோலைகள். ( 2 )
வீண் பேச்சுக்கள் இல்லை.لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا ۖ وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا
அங்கே ஸலாம் என்பதைத் தவிர எந்த வீணானதையும் அவர்கள் செவியுற மாட்டார்கள். அங்கே காலையிலும், மாலையிலும் அவர்களுக்குரிய உணவுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 19:62
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 56:25
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا
அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 78:35
لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً
அங்கே அவை வீணானதைச் செவியுறாது.
திருக்குர்ஆன் 88:11
கடும் குளிரும் இராது.
مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا
அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 76:13
No comments:
Post a Comment