Monday, February 20, 2023

அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 10 )

 அல்ஹம்துலில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 10 )


الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ

அல்ஹம்துலில்லாஹில்லதி அன்கதகு மினன்னார்.

பொருள் : இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

சட்டம் : ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், நாம் இந்த துஆவை ஓத வேண்டும்.

ஆதாரம் : நபி (ஸல்)
அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்! உடனே அவன் தன்னருகில் இருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், “அபுல் காசிம் – நபி (ஸல்) அவர்களின் — கூற்றுக்குக் கட்டுப்படு!’’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
ஸஹீஹ் புகாரி : 1356.

No comments:

Post a Comment