சொர்க்கத்தில் உணவு. ( 4 )
கனிகள் கைக்கெட்டும் உயரத்தில் தொங்கும்.قُطُوفُهَا دَانِيَةٌ
அதன் கனிகள் தாழ்ந்திருக்கும்.
திருக்குர்ஆன் 69:23
وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا
அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும்.
திருக்குர்ஆன் 76:14
அனைத்து வகைக் கனிகளும் உண்டு.
وَلَهُمْ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ ۖ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ
அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும் உண்டு. (இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?
திருக்குர்ஆன் 47:15
விரும்பிய கனிகளைப் பெறலாம்.
وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
அவர்கள் விரும்புகிற கனிகளுடனும், அவர்கள் ஆசைப்படும் பறவைகளின் மாமிசத்துடனும் (அச்சிறுவர்கள் சுற்றி வருவார்கள்.)
திருக்குர்ஆன் 56:20,21
நாற்றமில்லாத ஆற்று நீர், பாலாறு, தேனாறு, மதுவாறு அனைத்தும் உண்டு.
مَّثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ ۖ فِيهَا أَنْهَارٌ مِّن مَّاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّى
(இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அதில் மாற்றமடையாத தண்ணீரைக் கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் போகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும்.
திருக்குர்ஆன் 47:15
No comments:
Post a Comment