Thursday, May 23, 2024

துஆக்கள். { 2 }

துஆக்கள். { 2 }
தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ.

اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா.

ஆதாரம் : ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்கு உறங்கச் சென்ற பின்னால் தம் (வலக்) கையைத் தம் (வலக்) கன்னத்திற்குக் கீழே வைத்துக் கொள்வார்கள். பிறகு, 'அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா' (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். ஸஹீஹ் புகாரி : 6314.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

No comments:

Post a Comment