Friday, May 24, 2024

துஆக்கள். { 6 }

துஆக்கள். { 6 }
தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ.
اَلْحَمْدُ للهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(B]ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்.
ஆதாரம் : அபூதர் அல்கிஃபாரீ(ரலி) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் உறக்கத் திலிருந்து விழிக்கும்போது, 'அல்ஹம்து லில்லாஹில் லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நூஷூர். (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) அவன் எங்களை இறக்கச் செய்து பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது. என்று கூறுவார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6325.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

No comments:

Post a Comment