Wednesday, May 8, 2024

நற்பண்புகள். ( 71 )

நற்பண்புகள். ( 71 )
இரகசியம் காப்பீர்!

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால் பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவை குறித்து இரகசியம் பேசாதீர்கள்! நன்மையையும், இறையச்சத்தையும் இரகசியமாகப் பேசுங்கள். யாரிடம் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!
திருக்குர்ஆன் 58:9

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்புக்குப் பிறகும் கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.
ஸஹீஹ் புகாரி : 6289.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment