Thursday, May 23, 2024

நற்பண்புகள். ( 79 )

நற்பண்புகள். ( 79 )
சபை நாகரீகம் பேணுவீர்!

"நம்பிக்கை கொண்டோரே! சபைகளில் (பிறருக்கு) இடமளியுங்கள்!'' என்று உங்களிடம் கூறப்பட்டால் இடமளியுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு இடமளிப்பான். "எழுந்து விடுங்கள்!'' எனக் கூறப்பட்டால் எழுந்து விடுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 58:11

இப்னு உமர்(ரலி) கூறினார்:
ஒருவர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, 'நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6270.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment