*🏵️أعوذ بالله من الشيطان الرجيم🏵️*
*🏵️بسم الله الرحمن الرحيم*🏵️
*💖அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 💖*
*💫இரவு தூங்கசெல்லும் முன் செய்ய வேண்டிய அமல்கள்👇💫*
*✨தூங்கும் முன் செய்ய வேண்டிய அமல்கள்✨*
*❤️சுபஹானல்லாஹ் 33 தடவைகள்❤️*
*❤️அல்ஹம்துலில்லாஹ் 33 தடவைகள்❤️*
*❤️அல்லாஹு அக்பர் 34 தடவைகள்❤️*
*❤️ லாயிலாஹ இல்லல்லாஹ் இயன்றவரை குறைந்தபட்சம் 100 தடவைகள்❤️*
*🌟மூன்று குல் சூராக்கள் ஓதவும் சூரா பலக் ; சூரா நாஸ் ; சூரா இஃலாஸ் 🌟*
*🌸اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا🌸*
*🏵️அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா🏵️*
*✨💖பொருள் : இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன்.* *(விழிக்கிறேன்)✨💖*
*📚ஆதாரம்: புகாரி📚*
*🌼தூங்கும் முன்*
*பகரா அத்தியாயத்தின் கடைசி இரு* *வசனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.🌼*
*آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ*
*💥ஆமனர் ரஸுலு பிமா உன்ஸில இலைஹி மின் ரப்பிஹி வல் மூமினூன். குல்லுன் ஆமன பில்லாஹி, வமலாயி(க்)கத்திஹி வகு(த்)துபிஹி, வருஸுலிஹி, லாநுஃபர்ரி(க்)கு பைன அஹதிம் மின் ருஸுலிஹி, வகாலூ ஸமிஃனா வஅதஃனா ஃகுஃப்ரான(க்)க ரப்பனா வஇலை(க்)கல் மஸீர். லாயு(க்)கல்லிஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா உஸ்அஹா, லஹா மா கஸபத். வஅலைஹா மக்தஸபத். ரப்பனா லாதுஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா, ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்(த்)தஹு அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாக்க(த்)த லனா பிஹி, வஃபு அன்னா வஃக்ஃபிர் லனா வர்ஹம்னா அன்(த்)த மவ்லானா ஃபன்ஸுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்.*💥
*✨❤️பொருள் : ((இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்;* *இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை;* *(என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே!* *உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.*
*அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அ(து தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது* *சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை* *செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”✨❤️*
*📚ஆதாரம்: புகாரி📚*
*📓(திருக்குர்ஆன் 2:285,286)📓*
*💫ஆயத்துல் குர்ஸி💫*
*❤️اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ❤️*
*📓(அல்குர்ஆன் : 2:255)*📓
*💫அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா ஃபிஸ்ஸமாவா(த்)தி வமா ஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபவு இந்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபைன ஐதீஹிம் வமா ஃகல்ஃபஹும் வலாயுஹீ(த்)தூன பிஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிஃப்ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்💫*
*❤️அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.❤️*
*📓(அல்குர்ஆன் : 2:255)📓*