Sunday, November 20, 2022

ஹதீஸ்

. ⛲⛲⛲⛲⛲⛲

                 *ஹதீஸ்*


        *ஆயிஷா '(ரலி) அவர்களிடம் மக்கள்,* 

         *`நபி (ஸல்) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ(ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள்.* 

       *(என்று கேள்விப்படுகிறோமே)" என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி),* 

     *`நபி (ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு வஸிய்யத் செய்தார்கள்?*

      *நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த போது) நான் தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தேன்.* 

      *அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டு வரும்படிக் கேட்டார்கள்.* 

     *பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதைக் கூட உணரவில்லை.* 

    *அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்?` என்று கேட்டார்கள்.* 


அறிவிப்பவர் : அஸ்வத் (ரஹ்)

நூல் : புகாரி 2741

No comments:

Post a Comment