. 🥏🥏🥏🥏🥏🥏
*நபிமொழி*
*கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி(ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை.*
*நான் (நபி(ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால்,*
*நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள்.*
*அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பால துண்டுகளாகப் பிரித்து,*
*பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி(ஸல்) அவர்களிடம்,*
*`உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களோ" என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள்,*
*`அவர் (புத்திசாலியாக) இருந்தார்;*
*(சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.)*
*மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது" என்று பதில் கூறினார்கள்.*
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரலி)
நூல் : புகாரி 3818
No comments:
Post a Comment