Thursday, June 1, 2023

அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 45 )

 அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 45 )


اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا

அல்லாஹும்மஸ்கினா.
அல்லாஹும்மஸ்கினா.
அல்லாஹும்மஸ்கினா.

பொருள் : இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!

சட்டம் : நபி (ஸல்) அவர்கள் மழைக்காக, தங்களின் இரு கைகளையும் உயர்த்தி பிரார்த்தித்தார்கள்.

ஆதாரம் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தி கொண்டிருக்கும்போது மிம்பர்த் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழித்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1013.

No comments:

Post a Comment