அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 49 )
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா.
பொருள் : இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு இதைத் திருப்புவாயாக! எங்களுக்கு எதிரானதாக இதை ஆக்காதே!
சட்டம் : அளவுக்கு மேல் மழை பெய்தால் தமது இரு கைகளையும் உயர்த்தி, இந்த துஆவை ஓத வேண்டும்.
ஆதாரம் : அனஸ்(ரலி) அறிவித்தார்கள். (அடுத்த ஜும்ஆவில்) நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். என்று மக்கள் உரத்த குரலில் கூறினர். நபி(ஸல்) அவர்கள் புன்னகை செய்தார்கள். பின்னர் 'இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இதைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக இதை ஆக்கிவிடாதே' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மதீனாவைவிட்டு மழை விலகியது. அதன் சுற்றுப் புறங்களில் மழை பெய்யத் துவங்கியது. மதீனாவில் ஒரு துளியும் விழவில்லை. மதீனாவை நான் பார்த்தபோது அது ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதைப் போல் இருந்தது.
ஸஹீஹ் புகாரி : 1021.
No comments:
Post a Comment