அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 59 )
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ، اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B] வமுஜ்ரியஸ் ஸஹாபி(B] வஹாஸிமல் அஹ்ஸாபி(B] இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.
பொருள் : இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! இ(ப்பகை)வர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெ திராக எங்களுக்கு உதவுவாயாக!
சட்டம் : போர்கள் மற்றும் கலவரத்தின் போது, இந்த துஆவை ஓத வேண்டும்.
ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாட்களில் ஒருமுறை சூரியன் உச்சி சாயும் வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிறகு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தலானார்கள்: மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரைத் தவிர்க்க வாய்ப்பளித்து) அமைதி நிலை தரும்படி கேளுங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்து விடாமல் போரின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருங்கள். மேலும், சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு, 'இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! இ(ப்பகை)வர்களைத் தோற்க டித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். இதை அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2966.
Monday, June 19, 2023
அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 59 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment