Sunday, April 9, 2023

பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 14 )

பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 14 )

بِسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹ்.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால்.

சட்டம் : அம்பு எய்து வேட்டையாடும் போது அம்பு பிராணியைக் கொன்றால், அந்த அம்பு பிஸ்மில்லாஹ் கூறி விடப்பட்டிருக்குமானால் அதை உண்ணலாம்.

ஆதாரம் : அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு ('மிஅராள்' மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது(போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5476.

No comments:

Post a Comment