Sunday, April 23, 2023

அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 7 )

அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 7 )


اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ

அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து.

பொருள் : இறைவா! எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது.

சட்டம் : வானவர்களின் சொல்லுடன் எவருடைய சொல் ஒத்து விடுகிறதோ, அவருக்கு முன் பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும்.

ஆதாரம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம் (தொழுகையில்), 'சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு - தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்' என்று கூறும்போது நீங்கள் 'அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து - இறைவா! எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது' என்று கூறுங்கள். ஏனெனில், (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவருடைய சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகிறதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3228.

No comments:

Post a Comment