Tuesday, April 18, 2023

தொழுகை. ( 9 )

தொழுகை. ( 9 )

தொழுகையில் பேணுதல்.

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்!
திருக்குர்ஆன் 2:238

وَهَٰذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ مُّصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ الْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا ۚ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ يُؤْمِنُونَ بِهِ ۖ وَهُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ

இது, தாய் கிராமத்தை (மக்காவை)யும், அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம். பாக்கியம் பெற்றதும், தனக்கு முன்சென்றவற்றை உண்மைப்படுத்துவதுமாகும். மறுமையை நம்புவோர் இதை நம்புகின்றனர். அவர்கள் தமது தொழுகையில் பேணுதலாகவும் உள்ளனர்.
திருக்குர்ஆன் 6:92

الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.
திருக்குர்ஆன் 23:2

وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ

மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள்.
திருக்குர்ஆன் 23:9

وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ

அவர்கள் தமது தொழுகையைப் பேணுவார்கள்.
திருக்குர்ஆன் 70:34

No comments:

Post a Comment