Wednesday, February 28, 2024

நற்பண்புகள். ( 17 )

நற்பண்புகள். ( 17 )
இறைவழி உயிர் தியாகமே சிறந்தது!

அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ, மரணித்தாலோ அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், அருளும் அவர்கள் திரட்டிக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது.
திருக்குர்ஆன் 3:157

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தனக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறைவழியில்) பத்துமுறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2817.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment