Monday, April 15, 2024

நூல்கள்: புகாரி (1403)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்குரிய ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்குக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக் கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக் கொண்டு, நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்’ என்று சொல்லும் எனக் கூறிவிட்டுப் பிறகு, “தனது அருளிலிருந்து அல்லாஹ் வழங்கியதில் யார் கஞ்சத்தனம் செய்கிறாரோ, அவர் அது தமக்கு நல்லது என நினைக்க வேண்டாம். மாறாக அவர்களுக்கு அது கெட்டதாகும். அவர்கள் எதைக் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன்மூலம் மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்” எனும் (3:180) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: புகாரி (1403), நஸாயீ (2436), அஹ்மத் (8307)

No comments:

Post a Comment