Wednesday, April 24, 2024

நற்பண்புகள். ( 63 )

நற்பண்புகள். ( 63 )
உண்மை பேசுவீர்!

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!
திருக்குர்ஆன் 9:119

உண்மையாளர்களுக்கு அவர்களது உண்மையின் காரணமாக அல்லாஹ் பரிசளிப்பான்.
திருக்குர்ஆன் 33:24

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆம்விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6094.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment