Monday, April 15, 2024

நற்பண்புகள். ( 57 )

நற்பண்புகள். ( 57 )
ஆடம்பரம் வேண்டாம்!

(ஏகஇறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றிட வேண்டாம்.
திருக்குர்ஆன் 3:196

ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்கார பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5837.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment