Sunday, April 7, 2024

நற்பண்புகள். ( 53 )

நற்பண்புகள். ( 53 )
தாடியை வளரவிடவும்!

என் தாயின் மகனே! எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர்! எனது வார்த்தைக்காக காத்திராமல் இஸ்ராயீலின் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர் என்று கூறுவீரோ என அஞ்சினேன்'' என்று (ஹாரூன்) கூறினார்.
திருக்குர்ஆன் 20:94

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தம் தாடியைப் பிடிப்பதுப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5892.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment