பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 11 )
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
பொருள் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .
சட்டம் : நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைச் "சப்தமின்றி" ஓதினார்கள்.
ஆதாரம் : அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோருடன் (அவர்களுக்குப் பின்னால் நின்று) நான் தொழுதிருக்கிறேன். அவர்களில் யாருமே பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை (சப்தமாக) ஓதியதை நான் கேட்டதில்லை.
இதை கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 667.
No comments:
Post a Comment