Saturday, April 1, 2023

நரகத்தில் உணவு. ( 5 )

 நரகத்தில் உணவு. ( 5 )

தொண்டைக்குள் இறங்காத உணவு.

لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ

அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் சூடேற்றப்பட்ட பானமும், துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
திருக்குர்ஆன் 6:70

يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِن كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ ۖ وَمِن وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ

அதை மிடறுமிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது.
திருக்குர்ஆன் 14:17

يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ وَالْجُلُودُ

அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.
திருக்குர்ஆன் 22:20

كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ كَغَلْيِ الْحَمِيمِ

உருக்கிய செம்பைப் போலும், சூடேற்றப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்கும்.
திருக்குர்ஆன் 44:45,46

إِنَّ لَدَيْنَا أَنكَالًا وَجَحِيمًا وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا

நம்மிடம் விலங்குகளும் நரகமும்', விக்கிக் கொள்ளும் உணவும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளன.
திருக்குர்ஆன் 73:12,13

No comments:

Post a Comment