Saturday, August 27, 2022

வானவர்களின் பணிகள். ( 6 )

 வானவர்களின் பணிகள். ( 6 )

வானவர்கள் இறைவனின் தண்டனையைக் கொண்டு வருவார்கள்.


وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَٰذَا يَوْمٌ عَصِيبٌ

நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். "இது மிகவும் கடினமான நாள்'' எனவும் கூறினார்.

திருக்குர்ஆன் 11:77


قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ

நாங்கள் குற்றம் புரிந்த கூட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளோம். (என்றனர்)

திருக்குர்ஆன் 15:58


هَلْ يَنظُرُونَ إِلَّا أَن تَأْتِيَهُمُ الْمَلَائِكَةُ أَوْ يَأْتِيَ أَمْرُ رَبِّكَ ۚ كَذَٰلِكَ فَعَلَ الَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ وَمَا ظَلَمَهُمُ اللَّهُ وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ

வானவர்கள் அவர்களிடம் வருவதை, அல்லது உமது இறைவனின் கட்டளை வருவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அவர்களுக்கு முன் சென்றோரும் இவ்வாறே செய்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்தனர்.

திருக்குர்ஆன் 16:33


وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَىٰ قَالُوا إِنَّا مُهْلِكُو أَهْلِ هَٰذِهِ الْقَرْيَةِ ۖ إِنَّ أَهْلَهَا كَانُوا ظَالِمِينَ

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்த போது "அவ்வூரார் அநியாயக்காரர்களாக உள்ளனர்; அவ்வூராரை நாங்கள் அழிக்கப் போகிறோம்'' என்றனர்.

திருக்குர்ஆன் 29:31


قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّن طِينٍ مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ

"வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்(டு சுடப்பட்)ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 51:32,33,34

No comments:

Post a Comment