அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குச் சான்றுகள். ( 32 )
11. திருக்குர்ஆன் கூறும் சான்றுகள்.
أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَٰنُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ
அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 67:19
وَاللَّهُ أَنبَتَكُم مِّنَ الْأَرْضِ نَبَاتًا
"அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்'
திருக்குர்ஆன் 71:17
بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ
அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.
திருக்குர்ஆன் 75:4
إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைச் செவியுறுபவனாகவும்,
பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
திருக்குர்ஆன் 76:2
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 86:11
وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 95:3
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான்.
திருக்குர்ஆன் 111:1
No comments:
Post a Comment