. 🍓🍓🍓🍓🍓🍓🍓
நபிமொழி
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. `என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்` எனக் கேட்டார்.
அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) `இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?` என்றனர்.
நபி(ஸல்) அவர்கள் `இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!" (என்று கூறிவிட்டு அவரிடம்.)
`நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்
அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது
தொழுகையை நிலை நாட்ட வேண்டும்
ஸகாத் வழங்க வேண்டும்
உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)
நூல் : புகாரி 1396
No comments:
Post a Comment