Friday, September 16, 2022

நபிமார்களை நம்புதல். ( 1 )

 நபிமார்களை நம்புதல். ( 1 )

நபித்துவம் இறைவனின் நியமனம்.


وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ ۚ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي ۖ قَالُوا أَقْرَرْنَا ۚ قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ

"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?' என்று கேட்ட போது, "ஒப்புக் கொண்டோம்' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்' என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 3:81


وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّىٰ نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ ۘ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ 

அவர்களிடம் ஏதேனும் சான்று வருமானால் "அல்லாஹ்வின் தூதர்களுக்கு வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் வழங்கப்படும் வரை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர். "தனது தூதை எங்கே வைப்பது? (யாரிடம் கொடுப்பது)' என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். 

திருக்குர்ஆன் 6:124


يَا يَحْيَىٰ خُذِ الْكِتَابَ بِقُوَّةٍ ۖ وَآتَيْنَاهُ الْحُكْمَ صَبِيًّا

யஹ்யாவே! இவ்வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக! (என்று கூறினோம்) சிறுவராக இருக்கும் போதே அவருக்கு அதிகாரத்தை அளித்தோம்.

திருக்குர்ஆன் 19:12


قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا

உடனே அவர் (அக்குழந்தை), "நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்.

திருக்குர்ஆன் 19:30


وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ

உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்.

திருக்குர்ஆன் 93:7

No comments:

Post a Comment