வேதங்களை நம்புதல். ( 5 )
திருக்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம்.
وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ
(முஹம்மதே!) திரும்பத் திரும்ப ஓதப்படும் (வசனங்கள்) ஏழையும் மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கினோம்.
திருக்குர்ஆன் 15:87
وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِن لَّدُنْ حَكِيمٍ عَلِيمٍ
(முஹம்மதே!) நன்கறிந்த ஞானமிக்கோனிடமிருந்து இக்குர்ஆன் உமக்குக் கொடுக்கப்படுகிறது.
திருக்குர்ஆன் 27:6
إِنَّ الَّذِي فَرَضَ عَلَيْكَ الْقُرْآنَ لَرَادُّكَ إِلَىٰ مَعَادٍ ۚ قُل رَّبِّي أَعْلَمُ مَن جَاءَ بِالْهُدَىٰ وَمَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ
(முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். "நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழிகேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 28:85
الرَّحْمَٰنُ عَلَّمَ الْقُرْآنَ
அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.
திருக்குர்ஆன் 55:1,2
إِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ تَنزِيلًا
(முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம்.
திருக்குர்ஆன் 76:23
No comments:
Post a Comment