Friday, September 23, 2022

நபி - ரசூல் வேறுபாடு. ( 3 )

 நபி - ரசூல் வேறுபாடு. ( 3 )

நபிக்குத் தனி மார்க்கம்.


فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ الصَّالِحِينَ

அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது "யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.

திருக்குர்ஆன் 3:39


وَاذْكُرْ فِي الْكِتَابِ إِبْرَاهِيمَ ۚ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَّبِيًّا

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.

திருக்குர்ஆன் 19:41


فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ ۖ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا

அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்தவற்றையும் விட்டு அவர் விலகிய போது அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அன்பளிப்பாக வழங்கினோம். இருவரையும் நபியாக்கினோம்.

திருக்குர்ஆன் 19:49


وَوَهَبْنَا لَهُ مِن رَّحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا

நமது அருளால் அவரது சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அன்பளிப்புச் செய்தோம்.

திருக்குர்ஆன் 19:53


وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيسَ ۚ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَّبِيًّا

இவ்வேதத்தில் இத்ரீஸையும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.

திருக்குர்ஆன் 19:56

No comments:

Post a Comment