வேதங்களை நம்புதல். ( 4 )
திருக்குர்ஆன் எப்போது அருளப்பட்டது?
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.
திருக்குர்ஆன் 2:185
திருக்குர்ஆன் லைலத்துல் கத்ரில் அருளப்பட்டது.
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம்.
திருக்குர்ஆன் 44:3
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.
திருக்குர்ஆன் 97:1
திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது.
إِنَّا أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம்.
திருக்குர்ஆன் 12:2
قُرْآنًا عَرَبِيًّا غَيْرَ ذِي عِوَجٍ لَّعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)
திருக்குர்ஆன் 39:28
No comments:
Post a Comment