Sunday, April 2, 2023

பல் வகைத் தண்டனைகள். ( 1 )

 பல் வகைத் தண்டனைகள். ( 1 )

விலங்கிடப்படுவார்கள்.

وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ ۗ أُولَٰئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ ۖ وَأُولَٰئِكَ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ ۖ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

நீர் ஆச்சரியப்பட்டால் "நாங்கள் மண்ணாக ஆன பின்பும் புதுப் படைப்பாக ஆவோமா?' என்று அவர்கள் கூறுவது (iஇதைவிட) ஆச்சரியமாகவுள்ளது. அவர்கள் தான் தமது இறைவனை ஏற்க மறுத்தவர்கள். அவர்களின் கழுத்துக்களில் தான் விலங்குகள் உள்ளன. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 13:5

إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ

அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அவை (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளன. எனவே அவர்களின் தலைகள் மேல் நோக்கியுள்ளன.
திருக்குர்ஆன் 36:8

فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ

அப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 40:72

إِنَّ لَدَيْنَا أَنكَالًا وَجَحِيمًا وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا

நம்மிடம் விலங்குகளும் நரகமும்', விக்கிக் கொள்ளும் உணவும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளன.
திருக்குர்ஆன் 73:12,13

إِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَلَاسِلَ وَأَغْلَالًا وَسَعِيرًا

(நம்மை) மறுப்போருக்குச் சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகத்தையும் தயாரித்துள்ளோம்.
திருக்குர்ஆன் 76:4

No comments:

Post a Comment