Sunday, April 2, 2023

பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 10 )

 பிஸ்மில்லாஹ் என்பதன்

சிறப்பு. ( 10 )

بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

பிஸ்மிக்க ரப்பீ பிக்க வளஅத்து ஜன்பீ, வ பிக்க அர்ஃபஉஹு, இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா. வ இன் அர்சல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பி மா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.

பொருள் : என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக.

சட்டம் : படுக்கைக்குச் செல்லும் போது, மூன்று முறை விரிப்பைத் தட்டிவிட்டு பின்னர் இந்த துஆவை ஓத வேண்டும்.

ஆதாரம் ; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7393.

No comments:

Post a Comment