Saturday, April 1, 2023

நரகத்தில் உணவு. ( 4 )

 நரகத்தில் உணவு. ( 4 )

உருக்கப்பட்ட செம்பு போல் வெப்பமுடைய தண்ணீர் புகட்டப்படுவர்.

وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَاءَ فَلْيُؤْمِن وَمَن شَاءَ فَلْيَكْفُرْ ۚ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ۚ وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ ۚ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا

"இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது'' என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதிநீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.
திருக்குர்ஆன் 18:29

கொதிக்கும் நீரால் குடல் துண்டாகும்.

يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ وَالْجُلُودُ

அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.
திருக்குர்ஆன் 22:20

كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ

(இவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா?
திருக்குர்ஆன் 47:15

முள்மரமே உணவாகும்.

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ

முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.
திருக்குர்ஆன் 88:6

பசியைப் போக்காத உணவு.

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ

அது கொழுக்க வைக்காது; பசியையும் நீக்காது.
திருக்குர்ஆன் 88:7

No comments:

Post a Comment