Saturday, April 1, 2023

பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 8 )

பிஸ்மில்லாஹ் என்பதன்

சிறப்பு. ( 8 )

بِسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹ்.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால்.

சட்டம் : படுக்கைக்குச் செல்லும் போது, மூன்று முறை விரிப்பைத் தட்டிவிட்டு "பிஸ்மில்லாஹ்" என்று கூற வேண்டும்.

ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5257.

No comments:

Post a Comment