Friday, February 3, 2023

சொர்க்கச் சோலைகள். ( 12 )

 சொர்க்கச் சோலைகள். ( 12 )

இரண்டு வகை சொர்க்கம்.

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ

தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன.
திருக்குர்ஆன் 55:46

فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ

அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் பீறிட்டு ஓடும்.
திருக்குர்ஆன் 55:50

فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ

ஒவ்வொரு கனியிலும் இரண்டு வகைகள் அவ்விரண்டிலும் உள்ளன.
திருக்குர்ஆன் 55:52

مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ

அவர்கள் விரிப்புகளில் சாய்ந்திருப்பார்கள். அதன் உட்புறம் இஸ்தப்ரக் எனும் பட்டுவகையைச் சேர்ந்தது. அவ்விரு சொர்க்கச் சோலைகளின் கனிகள் தாழ்ந்திருக்கும்.
திருக்குர்ஆன் 55:54

وَمِن دُونِهِمَا جَنَّتَانِ

அவ்விரண்டும் அல்லாத வேறு இரு சோலைகளும் உள்ளன.
திருக்குர்ஆன் 55:62

فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ

அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரண்டு ஊற்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 55:66

فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ

அவ்விரண்டிலும் கனியும், பேரீச்சையும், மாதுளையும் உள்ளன.
திருக்குர்ஆன் 55:68

No comments:

Post a Comment