﷽ உபதேசம் : 795
31-08-2023 வியாழக்கிழமை
'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே?' என்று மக்கள் கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதி -1913
Thursday, August 31, 2023
உபதேசம் : 795
குர்ஆன் வசனம் 545
﷽ குர்ஆன் வசனம் 545
31-08-2023 வியாழக்கிழமை
وَمَا يَسۡتَوِى الۡاَعۡمٰى وَالۡبَصِيۡرُ ۙ وَالَّذِيۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الۡمُسِىۡٓءُ
குருடரும், பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரும், தீமை செய்தவரும் (சமமாக மாட்டார்கள்).
[அல்குர்ஆன் 40:58]
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 5 )
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 5 )
ஸுலைமான் நபிக்கு ஜின்கள் கட்டுப்படும்.
وَمِنَ الشَّيَاطِينِ مَن يَغُوصُونَ لَهُ وَيَعْمَلُونَ عَمَلًا دُونَ ذَٰلِكَ ۖ وَكُنَّا لَهُمْ حَافِظِينَ
ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.
திருக்குர்ஆன் 21:82
وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ
ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.
திருக்குர்ஆன் 27:17
قَالَ عِفْرِيتٌ مِّنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَ ۖ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ
"உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.
திருக்குர்ஆன் 27:39
وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ
தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.
திருக்குர்ஆன் 34:12
وَالشَّيَاطِينَ كُلَّ بَنَّاءٍ وَغَوَّاصٍ وَآخَرِينَ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ
ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம்.
திருக்குர்ஆன் 38:37,38
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 19 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 19 )
நன்மை செய்வதில்லை என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யலாகாது.
وَلَا تَجْعَلُوا اللَّهَ عُرْضَةً لِّأَيْمَانِكُمْ أَن تَبَرُّوا وَتَتَّقُوا وَتُصْلِحُوا بَيْنَ النَّاسِ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:224
சாட்சிகள் கூறுவதில் சந்தேகம் வந்தால் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும்.
تَحْبِسُونَهُمَا مِن بَعْدِ الصَّلَاةِ فَيُقْسِمَانِ بِاللَّهِ إِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِي بِهِ ثَمَنًا وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۙ وَلَا نَكْتُمُ شَهَادَةَ اللَّهِ إِنَّا إِذًا لَّمِنَ الْآثِمِينَ
நீங்கள் (அவர்களைச்) சந்தேகப்பட்டால் தொழுகைக்குப் பின் அவ்விருவரையும் தடுத்து வைத்துக் கொள்ளவும்! "இதனை (சாட்சியத்தை) விலை பேச மாட்டோம். நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம். அப்போது நாங்கள் குற்றவாளிகளாவோம்'' என்று அல்லாஹ்வின் மீது அவ்விருவரும் சத்தியம் செய்ய வேண்டும்.
திருக்குர்ஆன் 5:106
فَإِنْ عُثِرَ عَلَىٰ أَنَّهُمَا اسْتَحَقَّا إِثْمًا فَآخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ الَّذِينَ اسْتَحَقَّ عَلَيْهِمُ الْأَوْلَيَانِ فَيُقْسِمَانِ بِاللَّهِ لَشَهَادَتُنَا أَحَقُّ مِن شَهَادَتِهِمَا وَمَا اعْتَدَيْنَا إِنَّا إِذًا لَّمِنَ الظَّالِمِينَ
அவ்விருவரும் (பொய்சாட்சி கூறி) பாவம் செய்தனர் என்பது தெரிய வந்தால், யாருக்குப் பாதகமாக சாட்சியம் கூறினார்களோ அவர்களைச் சேர்ந்த இருவர், அவ்விருவர் இடத்தில் நின்று "எங்கள் சாட்சியம் இவ்விருவரின் சாட்சியத்தை விட மிகவும் உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அவ்வாறு வரம்பு மீறினால்) அப்போது நாங்கள் அநீதி இழைத்தவர்களாவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும்.
திருக்குர்ஆன் 5:107
சத்தியத்தைக் கேடயமாகப் பயன்படுத்துதல்.
اتَّخَذُوا أَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ
அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தார்கள். இழிவு தரும் வேதனை அவர்களுக்கு உண்டு.
திருக்குர்ஆன் 58:16
اتَّخَذُوا أَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ ۚ إِنَّهُمْ سَاءَ مَا كَانُوا يَعْمَلُونَ
அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது.
திருக்குர்ஆன் 63:2
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 18 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 18 )
சத்தியத்தை முறிக்கக் கூடாது
وَلَا تَجْعَلُوا اللَّهَ عُرْضَةً لِّأَيْمَانِكُمْ أَن تَبَرُّوا وَتَتَّقُوا وَتُصْلِحُوا بَيْنَ النَّاسِ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:224
وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا ۚ إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ
நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாளனாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
திருக்குர்ஆன் 16:91
وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِب بِّهِ وَلَا تَحْنَثْ ۗ إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا ۚ نِّعْمَ الْعَبْدُ ۖ إِنَّهُ أَوَّابٌ
உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்! (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் நல்லடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.
திருக்குர்ஆன் 38:44
சத்தியத்தை நிறைவேற்ற இயலாதபோது அதற்கான பரிகாரம்.
فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ
அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே.
திருக்குர்ஆன் 5:89
قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ ۚ وَاللَّهُ مَوْلَاكُمْ ۖ وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ
உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவன் அறிந்தவன்; ஞானமுடையோன்.
திருக்குர்ஆன் 66:2
Wednesday, August 30, 2023
குர்ஆன் வசனம் 544
﷽ குர்ஆன் வசனம் 544
30-08-2023 புதன்கிழமை
فَاصۡبِرۡ اِنَّ وَعۡدَ اللّٰهِ حَقٌّ وَّاسۡتَغۡفِرۡ لِذَنۡۢبِكَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ بِالۡعَشِىِّ وَالۡاِبۡكَارِ
(முஹம்மதே!) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. உமது பாவத்துக்கு மன்னிப்புக் கேட்பீராக! உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் போற்றிப் புகழ்வீராக!
[அல்குர்ஆன் 40:55]
உபதேசம் : 794
﷽ உபதேசம் : 794
30-08-2023 புதன்கிழமை
"உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பருடைய பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம்! அவருடைய கைத்தடியைக் கண்டாலும் அதை அவரிடமே ஒப்படைத்து விடட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : யஸீத் பின் ஸயீத் (ரலி) அஹ்மத் - 17261
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 18 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 18 )
சத்தியத்தை முறிக்கக் கூடாது
وَلَا تَجْعَلُوا اللَّهَ عُرْضَةً لِّأَيْمَانِكُمْ أَن تَبَرُّوا وَتَتَّقُوا وَتُصْلِحُوا بَيْنَ النَّاسِ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:224
وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا ۚ إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ
நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாளனாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
திருக்குர்ஆன் 16:91
وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِب بِّهِ وَلَا تَحْنَثْ ۗ إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا ۚ نِّعْمَ الْعَبْدُ ۖ إِنَّهُ أَوَّابٌ
உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்! (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் நல்லடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.
திருக்குர்ஆன் 38:44
சத்தியத்தை நிறைவேற்ற இயலாதபோது அதற்கான பரிகாரம்.
فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ
அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே.
திருக்குர்ஆன் 5:89
قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ ۚ وَاللَّهُ مَوْلَاكُمْ ۖ وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ
உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவன் அறிந்தவன்; ஞானமுடையோன்.
திருக்குர்ஆன் 66:2
Tuesday, August 29, 2023
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 4 )
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 4 )
மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன.
قُل لَّئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا
"இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:88
وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ
இவர்களுக்குத் தோழர்களை நியமித்துள்ளோம். இவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவர்கள் அழகாக்கிக் காட்டுகின்றனர். எனவே இவர்களுக்கு முன் சென்று விட்ட ஜின்களிலும், மனிதர்களிலும் உள்ள (தீய) கூட்டங்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் கட்டளை உறுதியாகிவிட்டது. இவர்கள் நட்டமடைந்தோராகி விட்டனர்.
திருக்குர்ஆன் 41:25
أُولَٰئِكَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ
அவர்களுக்கு முன் சென்ற ஜின்களுடனும், மனிதர்களுடனும் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நட்டமடைந்தனர்.
திருக்குர்ஆன் 46:18
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
திருக்குர்ஆன் 51:56
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 55:33
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 17 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 17 )
நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும்.
وَمَا أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ ۗ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.
திருக்குர்ஆன் 2:270
ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ
பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.
திருக்குர்ஆன் 22:29
يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا
அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.
திருக்குர்ஆன் 76:7
ஏமாற்றவும் மோசடிசெய்யவும் சத்தியம் செய்யக் கூடாது.
وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِن بَعْدِ قُوَّةٍ أَنكَاثًا تَتَّخِذُونَ أَيْمَانَكُمْ دَخَلًا بَيْنَكُمْ أَن تَكُونَ أُمَّةٌ هِيَ أَرْبَىٰ مِنْ أُمَّةٍ
உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக (அவர்களுக்குச் சாதகமாக) உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்!
திருக்குர்ஆன் 16:92
وَلَا تَتَّخِذُوا أَيْمَانَكُمْ دَخَلًا بَيْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌ بَعْدَ ثُبُوتِهَا وَتَذُوقُوا السُّوءَ بِمَا صَدَدتُّمْ عَن سَبِيلِ اللَّهِ ۖ وَلَكُمْ عَذَابٌ عَظِيمٌ
உங்களுக்கிடையே மோசடி செய்வதற்காக சத்தியங்களைச் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்தால் உறுதிப்பட்ட பாதம் சறுகிப் போய் விடும். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்ததால் தீங்கைச் சுவைப்பீர்கள். உங்களுக்குக் கடும் வேதனை கிடைக்கும்.
திருக்குர்ஆன் 16:94
உபதேசம் : 793
﷽ உபதேசம் : 793
29-08-2023 செவ்வாய்க்கிழமை
"நீங்கள் ஒரு சமுதாய மக்களுக்கு இமாமாக இருந்து தொழுகை நடத்தினால் அவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் சுருக்கமாகத் தொழவைய்யுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) முஸ்லிம் - 804
குர்ஆன் வசனம் 543
﷽ குர்ஆன் வசனம் 543
29-08-2023 செவ்வாய்க்கிழமை
يَوۡمَ لَا يَنۡفَعُ الظّٰلِمِيۡنَ مَعۡذِرَتُهُمۡ وَلَهُمُ اللَّعۡنَةُ وَلَهُمۡ سُوۡٓءُ الدَّارِ
அந்நாளில் அநீதி இழைத்தோருக்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது. அவர்களுக்குச் சாபம் உள்ளது. அவர்களுக்குத் தீய தங்குமிடமும் உண்டு.
[அல்குர்ஆன் 40:52]
Monday, August 28, 2023
குர்ஆன் வசனம் 542
﷽ குர்ஆன் வசனம் 542
28-08-2023 திங்கட்கிழமை
وَمَا دُعٰٓـؤُا الۡكٰفِرِيۡنَ اِلَّا فِىۡ ضَلٰلٍ
(ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.
[அல்குர்ஆன் 40:50]
உபதேசம் : 792
﷽ உபதேசம் : 792
28-08-2023 திங்கட்கிழமை
"ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரலி) அஹ்மத் - 21986
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 3 )
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 3 )
ஜின்கள் மனிதனை விட ஆற்றல் மிக்கவை.
قَالَ عِفْرِيتٌ مِّنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَ ۖ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ
"உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.
திருக்குர்ஆன் 27:39
قَالَ الَّذِي عِندَهُ عِلْمٌ مِّنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ
கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது.
திருக்குர்ஆன் 27:40
يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَاتٍ
அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன.
திருக்குர்ஆன் 34:13
وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا
வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம்.
திருக்குர்ஆன் 72:8
وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَّصَدًا
(ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
திருக்குர்ஆன் 72:9
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 16 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 16 )
அல்லாஹ் பைத்துல் மஃமூர் மீது சத்தியம் செய்தல்.
وَالْبَيْتِ الْمَعْمُورِ
"பைத்துல் மஃமூர்' மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 52:4
அல்லாஹ் எழுதுகோல் மீது சத்தியம் செய்தல்.
ن ۚ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
நூன். எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக
திருக்குர்ஆன் 68:1
அல்லாஹ் அகிலத்தின் மீது சத்தியம் செய்தல்.
فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ وَمَا لَا تُبْصِرُونَ
நீங்கள் பார்ப்பதன் மீதும், நீங்கள் பார்க்காததன் மீதும் சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 69:38,39
அல்லாஹ் உள்ளத்தின் மீது சத்தியம் செய்தல்.
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
குறை கூறிக்கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 75:2
அல்லாஹ் மரத்தின் மீது சத்தியம் செய்தல்.
وَالتِّينِ وَالزَّيْتُونِ
அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 95:1
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 2 )
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 2 )
ஜின்களிலும் தூதர்கள் அனுப்பப்பட்டனர்.
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَٰذَا
ஜின், மனித சமுதாயமே! "உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்க விருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?'' (என்று இறைவன் கேட்பான்).
திருக்குர்ஆன் 6:130
முஹம்மது நபி (ஸல்) ஜின்களுக்கும் தூதராக அனுப்பப்பட்டார்.
وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا ۖ فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَىٰ قَوْمِهِم مُّنذِرِينَ
(முஹம்மதே!) இக்குர்ஆனைச் செவியுறுவதற்காக ஜின்களில் ஒரு கூட்டத்தினரை உம்மிடம் நாம் அனுப்பியதை எண்ணிப் பார்ப்பீராக! அவை அவரிடம் வந்தபோது "வாயை மூடுங்கள்!'' என்று (தம் கூட்டத்தாரிடம்) கூறின. (ஓதி) முடிக்கப்பட்டபோது எச்சரிப்போராக தமது சமுதாயத்திடம் திரும்பின.
திருக்குர்ஆன் 46:29
قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا
ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று "நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்' எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது'' என (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 72:1
இறைத்தூதர்களுக்கு தீய மனிதர்கள் எதிரிகளாக இருந்தது போல தீய ஜின்களும் எதிரிகளாக இருந்தனர்
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம்.
திருக்குர்ஆன் 6:112
இப்லீஸ் என்பவனும் ஜின் இனத்தவன் தான்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான்.
திருக்குர்ஆன் 18:50
உபதேசம் : 791
﷽ உபதேசம் : 791
27-08-2023 ஞாயிற்றுக்கிழமை
பெண்கள் தமது தலையில் எதையும் ஒட்டுச்சேர்க்கை செய்வதை நபி (ஸல்) அவா்கள் கண்டித்தார்கள்!
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் 4312
குர்ஆன் வசனம் 541
﷽ குர்ஆன் வசனம் 541
27-08-2023 ஞாயிற்றுக்கிழமை
مَنۡ عَمِلَ سَيِّـئَـةً فَلَا يُجۡزٰٓى اِلَّا مِثۡلَهَا
யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார்.
[அல்குர்ஆன் 40:40]
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 15 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 15 )
ஷைத்தானின் சத்தியம்.
وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ
"நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே'' என்று அவர்களிடம் சத்தியம் செய்தான்.
திருக்குர்ஆன் 7:21
إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ
"உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்'' என்று (ஷைத்தான்) கூறினான்.
திருக்குர்ஆன் 38:83
அல்லாஹ் கடலின் மீது சத்தியம் செய்தல்.
وَالْبَحْرِ الْمَسْجُورِ
(யுகமுடிவு நாளில்) தீ மூட்டப்படும் கடலின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 52:6
அல்லாஹ் சாட்சிகள் மீது சத்தியம் செய்தல்.
وَشَاهِدٍ وَمَشْهُودٍ
சாட்சி கூறுவோர் மீதும், சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 85:3
அல்லாஹ் எண்கள் மீது சத்தியம் செய்தல்.
وَالشَّفْعِ وَالْوَتْرِ
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 89:3
Saturday, August 26, 2023
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 14 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 14 )
அல்லாஹ் மலையின் மீது சத்தியம் செய்தல்.
وَالطُّورِ
தூர் (மலை) மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 52:1
وَالسَّقْفِ الْمَرْفُوعِ
உயர்த்தப்பட்ட முகட்டின் மேல் சத்தியமாக!
திருக்குர்ஆன் 52:5
وَطُورِ سِينِينَ
தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 95:2
அல்லாஹ் ஆண், பெண் மீது சத்தியம் செய்தல்.
وَوَالِدٍ وَمَا وَلَدَ
பெற்றவன் மீதும், அவன் பெற்றெடுத்ததன் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 90:3
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ
ஆணையும், பெண்ணையும் அவன் படைத்திருப்பதன் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 92:3
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 1 )
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 1 )
ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டனர்.
قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
"நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' என்று (இறைவன்) கேட்டான். "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!'' என்று கூறினான்.
திருக்குர்ஆன் 7:12
وَالْجَانَّ خَلَقْنَاهُ مِن قَبْلُ مِن نَّارِ السَّمُومِ
கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 15:27
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا
"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். "களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 17:61
قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ ۖ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
"நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.
திருக்குர்ஆன் 38:76
وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.
திருக்குர்ஆன் 55:15
உபதேசம் : 790
﷽ உபதேசம் : 790
26-08-2023 சனிக்கிழமை
"என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாக நான் காட்டிக் கொள்ளலாமா?" என்று ஒரு பெண் நபி (ஸல்) அவா்களிடம் கேட்டதற்கு "கிடைக்காத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்பவர், போலியான இரு ஆடைகளை அணிந்து கொண்டவர் போலாவார்!" என்று பதிலளித்தாா்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம் - 4317
குர்ஆன் வசனம் 540
﷽ குர்ஆன் வசனம் 540
26-08-2023 சனிக்கிழமை
يٰقَوۡمِ اِنَّمَا هٰذِهِ الۡحَيٰوةُ الدُّنۡيَا مَتَاعٌ وَّاِنَّ الۡاٰخِرَةَ هِىَ دَارُ الۡقَرَارِ
இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.
[அல்குர்ஆன் 40:39]
Friday, August 25, 2023
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 13 )
அல்லாஹ் காற்றின் மீது சத்தியம் செய்தல்.
وَالذَّارِيَاتِ ذَرْوًا فَالْحَامِلَاتِ وِقْرًا
வேகமாக புழுதியைப் பரத்துபவை மீதும், மழையைச் சுமப்பவற்றின் மீதும்,
திருக்குர்ஆன் 51:1,2
وَالْمُرْسَلَاتِ عُرْفًا فَالْعَاصِفَاتِ عَصْفًا
தொடர்ந்து அனுப்பப்படுபவை (காற்றின்) மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 77:1,2
وَالنَّاشِرَاتِ نَشْرًا فَالْفَارِقَاتِ فَرْقًا
பரப்பி விடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 77:3,4
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا عُذْرًا أَوْ نُذْرًا
மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 77:5,6
அல்லாஹ் குதிரைகள் மீது சத்தியம் செய்தல்.
وَالْعَادِيَاتِ ضَبْحًا فَالْمُورِيَاتِ قَدْحًا
மூச்சிறைத்து வேகமாக ஓடுபவைகளின் (குதிரைகளின்) மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
திருக்குர்ஆன் 100:1,2
நூல் : முஸ்லிம் 1548
. 🕌🕌🕌🕌🕌🕌
நபிமொழி - ஜும்ஆ
“சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும்.
அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்;
அன்று தான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்;
அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
அன்று தான் யுக முடிவு நிகழும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 1548
உபதேசம் : 789
﷽ உபதேசம் : 789
25-08-2023 வெள்ளிக்கிழமை
"அல்லாஹ்
அக்கிரமக்காரனுக்கு அவகாசமளிப்பான்! இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் விடவே மாட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) புகாரி - 4686
குர்ஆன் வசனம் 539
﷽ குர்ஆன் வசனம் 539
25-08-2023 வெள்ளிக்கிழமை
அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுபவன் இல்லை
[அல்குர்ஆன் 40:31]
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 9 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 9 )
ஷைத்தான்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாது.
وَحَفِظْنَاهَا مِن كُلِّ شَيْطَانٍ رَّجِيمٍ إِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَأَتْبَعَهُ شِهَابٌ مُّبِينٌ
ஒட்டுக் கேட்பவனைத் தவிர, விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதைப் பாதுகாத்துள்ளோம். அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும்.
திருக்குர்ஆன் 15:17,18
إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ
அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.
திருக்குர்ஆன் 26:212
وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ
கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்).
திருக்குர்ஆன் 37:7
وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا
வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம்.
திருக்குர்ஆன் 72:8
وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَّصَدًا
(ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
திருக்குர்ஆன் 72:9
Thursday, August 24, 2023
உபதேசம் : 788
﷽ உபதேசம் : 788
24-08-2023 வியாழக்கிழமை
"மனதை வேதனை அடையச்செய்யும் செய்தி கேட்டும் உடனே தண்டித்துவிடாமல் மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா அல் (ரலி) புகாரி - 7378
குர்ஆன் வசனம் 538
﷽ குர்ஆன் வசனம் 538
24-08-2023 வியாழக்கிழமை
وَاِنۡ يَّكُ صَادِقًا يُّصِبۡكُمۡ بَعۡضُ الَّذِىۡ يَعِدُكُمۡ
வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்
[அல்குர்ஆன் 40:28]
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 8 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 8 )
அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேட வேண்டும்.
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۚ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ
ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 7:200
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக!
திருக்குர்ஆன் 16:98
وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ
"என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 23:97
وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ
"என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' (என்றும் கூறுவீராக!)
திருக்குர்ஆன் 23:98
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۖ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 41:36
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 12 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 12 )
அல்லாஹ் காலை பொழுதின் மீது சத்தியம் செய்தல்.
وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ
வெளிச்சம் தரும் காலைப் பொழுதின் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 74:34
وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
தெளிவாகும் காலைப் பொழுதின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 81:18
وَالْفَجْرِ
வைகறையின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 89:1
فَالْمُغِيرَاتِ صُبْحًا
அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும்,
திருக்குர்ஆன் 100:3
அல்லாஹ் மாலை பொழுதின் மீது சத்தியம் செய்தல்.
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 84:16
Wednesday, August 23, 2023
உபதேசம் : 787
﷽ உபதேசம் : 787
23-08-2023 புதன்கிழமை
"ஒருவா் தன் குடும்பத்தினா், தன் சொத்துக்கள், தன் குழந்தைகள் மற்றும் அண்டை வீட்டார் மீது அளவு கடந்த நேசம் வைத்த காரணத்தால் சோதனையில் ஆழ்த்தப்படும்பொழுது தொழுகை, நோன்பு, தர்மம், நல்லதை ஏவுதல், தீயதைத் தடுத்தல் ஆகியவை அதற்குப் பரிகாரமாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)புகாரி -525*
குர்ஆன் வசனம் 537
﷽ குர்ஆன் வசனம் 537
23-08-2023 புதன்கிழமை
وَاللّٰهُ يَقۡضِىۡ بِالۡحَقِّؕ وَالَّذِيۡنَ يَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِهٖ لَا يَقۡضُوۡنَ بِشَىۡءٍؕ
அல்லாஹ்வே நியாயத் தீர்ப்பு அளிப்பவன். அவனையன்றி அவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எது பற்றியும் தீர்ப்பளிக்க மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 40:20]
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 11 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 11 )
அல்லாஹ் நாட்கள் மீது சத்தியம் செய்தல்.
لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ
உமது வாழ்நாளின் மீது சத்தியமாக! அவர்கள் தமது (காம) போதையில் தட்டழிந்தனர்.
திருக்குர்ஆன் 15:72
وَالْبَحْرِ الْمَسْجُورِ
(யுகமுடிவு நாளில்) தீ மூட்டப்படும் கடலின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 52:6
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ
கியாமத் நாள் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 75:1
وَالْيَوْمِ الْمَوْعُودِ
வாக்களிக்கப்பட்ட நாள் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 85:2
وَالْعَصْرِ
காலத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 103:1
Tuesday, August 22, 2023
உபதேசம் : 786
﷽ உபதேசம் : 786
22-08-2023 செவ்வாய்க்கிழமை
”இவ்வுலகில் மக்களை நியாயமின்றி வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்” என்று நபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்.
அறிவிப்பவா்: ஹிஷாம் (ரலி) முஸ்லிம்:5096
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 7 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 7 )
மனித உள்ளங்களில் தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான்.
يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ ۖ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا
அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.
திருக்குர்ஆன் 4:120
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
திருக்குர்ஆன் 5:91
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِن سَوْآتِهِمَا وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَٰذِهِ الشَّجَرَةِ إِلَّا أَن تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ
அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். "இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.
திருக்குர்ஆன் 7:20
فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلَىٰ
அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)
திருக்குர்ஆன் 20:120
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
திருக்குர்ஆன் 114:5
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 10 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 10 )
அல்லாஹ் பகலின் மீது சத்தியம் செய்தல்.
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
அதை (சூரியனை) வெளிப்படுத்தும் பகலின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:3
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
பிரகாசிக்கும் பகல் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 92:2
وَالضُّحَىٰ
முற்பகல் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 93:1
அல்லாஹ் மக்கா நகரின் மீது சத்தியம் செய்தல்.
لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ وَأَنتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ
(முஹம்மதே!) இந்நகரில் (மக்காவில்) நீர் வசிக்கும் நிலையில் இந்த நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 90:1,2
وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 95:3
குர்ஆன் வசனம் 536
﷽ குர்ஆன் வசனம் 536
22-08-2023 செவ்வாய்க்கிழமை
يَعۡلَمُ خَآٮِٕنَةَ الۡاَعۡيُنِ وَمَا تُخۡفِى الصُّدُوۡرُ
கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.
[அல்குர்ஆன் 40:19]
Monday, August 21, 2023
உபதேசம் : 785
﷽ உபதேசம் : 785
21-08-2023 திங்கட்கிழமை
அன்னியப் பெண் மீது) திடீரெனப் பார்வை படுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபொழுது, "பார்வையைத் திருப்பிக்கொள்ளவேண்டும்" என்று கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) திர்மீதி - 2700
குர்ஆன் வசனம் 535
﷽ குர்ஆன் வசனம் 535
21-08-2023 திங்கட்கிழமை
مَا لِلظّٰلِمِيۡنَ مِنۡ حَمِيۡمٍ وَّلَا شَفِيۡعٍ يُّطَاعُ
அநீதி இழைத்தோருக்கு எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை.
[அல்குர்ஆன் 40:18]
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 9 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 9 )
அல்லாஹ் இரவின் மீது சத்தியம் செய்தல்.
وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக
திருக்குர்ஆன் 81:17
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
இரவின் மீதும் அது உள்ளடக்கியவற்றின் மீதும், முழுமை பெற்ற நிலவின் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 84:18
وَلَيَالٍ عَشْرٍ
பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 89:2
وَاللَّيْلِ إِذَا يَسْرِ
கடந்து செல்லும் இரவின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 89:4
وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 92:1
ஆயத்துல் குர்ஸி உடைய பலன்கள்
ஆயத்துல் குர்ஸி உடைய பலன்கள்
1. வீட்டில் இருந்து வெளியில் நாம் போகும் போது இதை ஒதும் பட்சத்தில் நான்கு திசையிலுருந்தும் 70,000 மலக்குகள் உடைய பாதுகாப்பு நமக்கு கிடைக்கும்
2. வீட்டுக்குள் போகும் போது ஒதினால் நம் வீட்டுக்குள் கஷ்டங்கள் இருக்காது
3. ஒலு செய்து முடித்த பின் ஒதினால் 70 தர்ஜா அதாவது அல்லாஹ்வின் அருகில் நீங்கள் இருப்பீர்கள்
4. தூங்கும் முன்பு ஒதினால் ஒரு மலக்கு நம்மை பாதுகாப்பார்
5. ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பின்னும் ஒதினால் சொர்கத்தில் நாம் செல்வதற்கு நம் மரணம் மட்டும் தான் தடையாக இருக்கும்
6. இதை நீங்கள் முடிந்த வரை SHARE செய்யவும் காரணம் இதுவும் ஒரு 'சதக்கா ஜாரியா'வாகும் ...
சதக்கா ஜாரியா' என்றால் உலகம் கடைசி நாள் வரை உங்களுக்கு (அந்த தர்மத்திற்கு) பிரதி பலன் கிடைக்கும் என்று அர்த்தம்.
நீங்கள் ஒருவருக்கு SHARE செய்து.... அதை யாரெல்லாம் மற்றவர்களுக்கு SHARE செய்வார்களோ.... அதன்படி யாரெல்லாம் ஆயத்துல் குர்ஸி ஓதுவார்களோ.... அதன் ஒரு பங்கு கூலி உங்கள் மறைவிற்க்கு பின்னும்... உங்கள் கபர்க்கு வந்து சேரும் இன்-ஷாஃ-அல்லாஹ்...
உபதேசம் : 784
﷽ உபதேசம் : 784
20-08-2023 ஞாயிற்றுக்கிழமை
"உயிருள் பிராணிகள் ஒவ்வொன்றிகும் உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2363
குர்ஆன் வசனம் 534
﷽ குர்ஆன் வசனம் 534
20-08-2023 ஞாயிற்றுக்கிழமை
فَادۡعُوا اللّٰهَ مُخۡلِصِيۡنَ لَهُ الدِّيۡنَ وَلَوۡ كَرِهَ الۡـكٰفِرُوۡنَ
(ஏக இறைவனை) மறுப்போர் வெறுத்தபோதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!
[அல்குர்ஆன் 40:14]
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 6 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 6 )
கெட்ட மனிதர்கள் நரகத்திற்கு செல்வது போல் இவனும் நரகத்திற்குச் செல்வான்.
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنسِ
ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.
திருக்குர்ஆன் 7:179
وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
"மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.
திருக்குர்ஆன் 11:119
فَكُبْكِبُوا فِيهَا هُمْ وَالْغَاوُونَ وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
அவர்களும், வழிகெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 26:94,95
இறைத் தூதர்கள் தவிர மற்ற மனிதர்களுக்கு அவன் தென்பட மாட்டான்.
إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ۗ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ
நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.
திருக்குர்ஆன் 7:27
இப்லீஸின் சந்ததிகளே ஷைத்தான்கள் ஆவர்.
أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِن دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ ۚ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا
என்னையன்றி அவனையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் (ஏகத்துவத்துக்கு இணைவைப்பைப்) பகரமாக்கியது மிகவும் கெட்டது.
திருக்குர்ஆன் 18:50
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 8 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 8 )
அல்லாஹ் நட்சத்திரங்கள் மீது சத்தியம் செய்தல்.
وَالنَّجْمِ إِذَا هَوَىٰ
நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை!
திருக்குர்ஆன் 53:1
فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 56:75
فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ الْجَوَارِ الْكُنَّسِ
மறைந்தும் மறையாமலிருக்கிற, (முழுதும்) மறைகின்ற நட்சத்திரங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 81:15,16
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
நட்சத்திரங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 85:1
وَالسَّمَاءِ وَالطَّارِقِ
வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 86:1
Saturday, August 19, 2023
உபதேசம் : 783
﷽ உபதேசம் : 783
19-08-2023 சனிக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர் ஒன்றில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக்கிடந்தாள். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 3015
குர்ஆன் வசனம் 533
﷽ குர்ஆன் வசனம் 533
19-08-2023 சனிக்கிழமை
وَمَا يَتَذَكَّرُ اِلَّا مَنۡ يُّنِيۡبُ
திருந்துபவர் தவிர மற்றவர் படிப்பினை பெறுவதில்லை.
[அல்குர்ஆன் 40:13]
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 5 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 5 )
உறுதியான நம்பிக்கை கொண்டவர்களை அவனால் வழிகெடுக்க முடியாது.
وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِيَ عَلَيْكُم مِّن سُلْطَانٍ إِلَّا أَن دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي
"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறிவிட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான்.
திருக்குர்ஆன் 14:22
إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ
எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
திருக்குர்ஆன் 15:42
إِنَّهُ لَيْسَ لَهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை.
திருக்குர்ஆன் 16:99
إِنَّمَا سُلْطَانُهُ عَلَى الَّذِينَ يَتَوَلَّوْنَهُ وَالَّذِينَ هُم بِهِ مُشْرِكُونَ
தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணைகற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது.
திருக்குர்ஆன் 16:100
إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ ۚ وَكَفَىٰ بِرَبِّكَ وَكِيلًا
"எனது (நல்ல) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
திருக்குர்ஆன் 17:65
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 7 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 7 )
அல்லாஹ் பூமியின் மீது சத்தியம் செய்தல்.
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ
பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 86:12
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:6
அல்லாஹ் சூரியன் மீதும், சந்திரன் மீதும் சத்தியம் செய்தல்.
وَالشَّمْسِ وَضُحَاهَا
சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:1
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:2
كَلَّا وَالْقَمَرِ
ஆம்! சந்திரன் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 74:32
Friday, August 18, 2023
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 4 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 4 )
மனிதர்களை வழிகெடுப்பான்
قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ
"நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான்.
திருக்குர்ஆன் 7:16
ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَن شَمَائِلِهِمْ ۖ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ
"பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).
திருக்குர்ஆன் 7:17
قَالَ أَرَأَيْتَكَ هَٰذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا
"என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் கூறினான்.
திருக்குர்ஆன் 17:62
قَالَ اذْهَبْ فَمَن تَبِعَكَ مِنْهُمْ فَإِنَّ جَهَنَّمَ جَزَاؤُكُمْ جَزَاءً مَّوْفُورًا
"நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி'' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 17:63
وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُم بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَعِدْهُمْ ۚ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا
உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
திருக்குர்ஆன் 17:64
குர்ஆன் வசனம் 532
﷽ குர்ஆன் வசனம் 532
18-08-2023 வெள்ளிக்கிழமை
مَا يُجَادِلُ فِىۡۤ اٰيٰتِ اللّٰهِ اِلَّا الَّذِيۡنَ كَفَرُوۡا فَلَا يَغۡرُرۡكَ تَقَلُّبُهُمۡ فِى الۡبِلَادِ
(ஏக இறைவனை) மறுப்போர் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்ய மாட்டார்கள். அவர்கள் நகரங்களில் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றிட வேண்டாம்.
[அல்குர்ஆன் 40:4]
உபதேசம் : 782
﷽ உபதேசம் : 782
18-08-2023 வெள்ளிக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும் உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்கா முஸல்லா என்ற திடலுக்கு புறப்பட்டு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது நிகழ்த்தும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மாறாக மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) திர்மிதீ - 512
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 6 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 6 )
அல்லாஹ் வானத்தின் மீது சத்தியம் செய்தல்.
وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ
பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 51:7
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 84:16
وَالسَّمَاءِ وَالطَّارِقِ
வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 86:1
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 86:11
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
வானத்தின் மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:5
Thursday, August 17, 2023
உபதேசம் : 781
﷽ உபதேசம் : 781
17-08-2023 வியாழக்கிழமை
"நபித்துவம் முற்றுப் பெற்று விட்டது! எனக்குப் பின்னால் எந்த நபியும் இல்லை!"என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) திர்மிதீ - 2198
குர்ஆன் வசனம் 531
﷽ குர்ஆன் வசனம் 531
17-08-2023 வியாழக்கிழமை
غَافِرِ الذَّنۡۢبِ وَقَابِلِ التَّوۡبِ شَدِيۡدِ الۡعِقَابِ ذِى الطَّوۡلِؕ
(அவன்) பாவத்தை மன்னிப்பவன்; மன்னிப்புக் கோருவதை ஏற்பவன்; கடுமையாகத் தண்டிப்பவன்; அருளுடையவன்.
[அல்குர்ஆன் 40:3]
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 3 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 3 )
இப்லீஸ் பணிய மறுத்தான்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.
திருக்குர்ஆன் 2:34
وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ السَّاجِدِينَ
உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் "ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.
திருக்குர்ஆன் 7:11
فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ إِلَّا إِبْلِيسَ أَبَىٰ أَن يَكُونَ مَعَ السَّاجِدِينَ
இப்லீஸைத் தவிர வானவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இருக்க மறுத்து விட்டான்.
திருக்குர்ஆன் 15:30,31
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களிடம் நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.
திருக்குர்ஆன் 20:116
فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ إِلَّا إِبْلِيسَ اسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது இப்லீஸைத் தவிர வானவர் அனைவரும் பணிந்தனர். அவன் அகந்தை கொண்டான். (ஏகஇறைவனை) மறுப்போரில் ஆனான்.
திருக்குர்ஆன் 38:73,74
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 5 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 5 )
அல்லாஹ் திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்தல்.
وَالْقُرْآنِ الْحَكِيمِ
ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 36:2
ص ۚ وَالْقُرْآنِ ذِي الذِّكْرِ
ஸாத். அறிவுரை அடங்கிய இக்குர்ஆன் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 38:1
وَالْكِتَابِ الْمُبِينِ
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 44:2
ق ۚ وَالْقُرْآنِ الْمَجِيدِ
காஃப். மகத்தான இக்குர்ஆன் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 50:1
فِي رَقٍّ مَّنشُورٍ
விரித்து வைக்கப்பட்ட ஏட்டில் எழுதப்பட்ட புத்தகத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 52:3
Wednesday, August 16, 2023
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 4 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 4 )
அல்லாஹ் வானவர்கள் மீது சத்தியம் செய்தல்.
وَالصَّافَّاتِ صَفًّا
அணி அணியாய் நிற்போர் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 37:1
فَالْمُقَسِّمَاتِ أَمْرًا
கட்டளைகளைப் பங்கிடுவோர் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 51:4
وَالنَّازِعَاتِ غَرْقًا
பலமாகக் கைப்பற்றுவோர் (வானவர்கள்) மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 79:1
وَالنَّاشِطَاتِ نَشْطًا
எளிதாகக் கைப்பற்றுவோர் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 79:2
فَالْمُدَبِّرَاتِ أَمْرًا
நீந்திச் செல்வோர் மீதும், முந்திச் செல்வோர் மீதும், காரியங்களை நிர்வாகிப்போர் மீதும் ஆணையாக!
திருக்குர்ஆன் 79:5
உபதேசம் : 780
﷽ உபதேசம் : 780
16-08-2023 புதன்கிழமை
"மழை பொய்த்து விடுவதற்குப் பெயர் பஞ்சமன்று! மாறாக, மழை பெய்தும் பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காமலிருப்பதே பஞ்சமாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5563
குர்ஆன் வசனம் 530
﷽ குர்ஆன் வசனம் 530
16-08-2023 புதன்கிழமை
தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் "உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!" என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.
[அல்குர்ஆன் 39:73]
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 2 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 2 )
ஷைத்தானுக்கு இறைவனால் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
قَالَ أَنظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
"அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 7:14
قَالَ إِنَّكَ مِنَ الْمُنظَرِينَ
"நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 7:15
قَالَ رَبِّ فَأَنظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
"இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 15:36
قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنظَرِينَ إِلَىٰ يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ
"குறிப்பிட்ட நேரத்திற்கான நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்'' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 15:37,38
قَالَ أَرَأَيْتَكَ هَٰذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا
"என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் கூறினான்.
திருக்குர்ஆன் 17:62
Tuesday, August 15, 2023
உபதேசம் : 779
﷽ உபதேசம் : 779
15-08-2023 செவ்வாய்க்கிழமை
"நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன்! இதன் இரவும் பகலைப் போன்றது! அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறுயாரும் வழி தவற மாட்டார்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இர்பால் பின் ஸாரியா (ரலி) இப்னுமாஜா -43
குர்ஆன் வசனம் 529
﷽ குர்ஆன் வசனம் 529
15-08-2023 செவ்வாய்க்கிழமை
فَبِئۡسَ مَثۡوَى الۡمُتَكَبِّرِيۡنَ
பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
[அல்குர்ஆன் 39:72]
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 3 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 3 )
அல்லாஹ் தன் மீது சத்தியம் செய்தல்.
فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ
உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.
திருக்குர்ஆன் 15:92,93
فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا
உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம்.
திருக்குர்ஆன் 19:68
فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِّثْلَ مَا أَنَّكُمْ تَنطِقُونَ
வானம் மற்றும் பூமியின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசுகிறீர்கள் என்பது (உண்மையாக இருப்பது) போல் இது உண்மை.
திருக்குர்ஆன் 51:23
فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ عَلَىٰ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன். அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்போர் அல்லர்.
திருக்குர்ஆன் 70:40,41
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:7
Monday, August 14, 2023
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 1 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 1 )
இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்டவன்.
قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
"நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' என்று (இறைவன்) கேட்டான். "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!'' என்று கூறினான்.
திருக்குர்ஆன் 7:12
وَالْجَانَّ خَلَقْنَاهُ مِن قَبْلُ مِن نَّارِ السَّمُومِ
கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 15:27
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا
"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். "களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 17:61
قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ ۖ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
"நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.
திருக்குர்ஆன் 38:76
وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.
திருக்குர்ஆன் 55:15
குர்ஆன் வசனம் 527
﷽ குர்ஆன் வசனம் 527
14-08-2023 திங்கட்கிழமை
وَالۡاَرۡضُ جَمِيۡعًا قَبۡضَتُهٗ يَوۡمَ الۡقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطۡوِيّٰتٌۢ بِيَمِيۡنِهٖ ؕ سُبۡحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشۡرِكُوۡنَ
கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.
[அல்குர்ஆன் 39:67]
உபதேசம் : 777
﷽ உபதேசம் : 777
14-08-2023 திங்கட்கிழமை
"உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்" என்று நபி (ஸல்) அவா்கள் கூறியபொழுது "அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம்! அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவுவோம்?" என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவனுடைய கைகளைப் பிடித்து அக்கிரமம் செய்யவிடாமல் தடுப்பதே அவனுக்கு நீ செய்யும் உதவி" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி) புகாரி - 2444
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 2 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 2 )
அல்லாஹ்வுக்காக மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும்.
وَمَا أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ ۗ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.
திருக்குர்ஆன் 2:270
فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا ۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَٰنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا
நீர், உண்டு பருகி மனநிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் "நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 19:26
சத்தியம் செய்தால் நிறைவேற்ற வேண்டும்.
وَلَا تَجْعَلُوا اللَّهَ عُرْضَةً لِّأَيْمَانِكُمْ أَن تَبَرُّوا وَتَتَّقُوا وَتُصْلِحُوا بَيْنَ النَّاسِ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:224
لَّا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன்.
திருக்குர்ஆன் 2:225
لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ الْأَيْمَانَ
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.
திருக்குர்ஆன் 5:89
மூடநம்பிக்கை. ( 5 )
மூடநம்பிக்கை. ( 5 )
குறி, ஜோதிடம், சூதாட்டம்.
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 2:219
وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ
பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
திருக்குர்ஆன் 5:3
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நம்பிக்கை கொண்டோரே! மது சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
திருக்குர்ஆன் 5:90
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
திருக்குர்ஆன் 5:91
وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَمَا أَمْرُ السَّاعَةِ إِلَّا كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. யுகமுடிவு நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
திருக்குர்ஆன் 16:77
உபதேசம் : 776
﷽ உபதேசம் : 776
13-08-2023 ஞாயிற்றுக்கிழமை
"என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு அதில் மோசடி செய்தவன்,
சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்,
கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்
ஆகிய முவருக்கும் எதிராக மறுமை நாளில் நான் வழக்காடுவேன்!" என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவா்கள் கூறினாாகள்.
அறிவிப்பவா்: அபூ ஹுரைரா (ரலி) புகாரி-2227
குர்ஆன் வசனம் 526
﷽ குர்ஆன் வசனம் 526
13-08-2023 ஞாயிற்றுக்கிழமை
وَ الَّذِيۡنَ كَفَرُوۡا بِاٰيٰتِ اللّٰهِ اُولٰٓٮِٕكَ هُمُ الۡخٰسِرُوۡنَ
அல்லாஹ்வின் வசனங்களை மறுப்பவர்களே நட்டமடைந்தவர்கள்.
[அல்குர்ஆன் 39:63]
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 1 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 1 )
அல்லாஹ்வின் பெயரால் மட்டும் சத்தியம் செய்தல்.
وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءَتْهُمْ آيَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَا ۚ قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ اللَّهِ ۖ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ
"எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்'' என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன எனக் கூறுவீராக! "அது நிகழும்போது அவர்கள் நம்ப மாட்டார்கள்'' என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
திருக்குர்ஆன் 6:109
وَيَحْلِفُونَ بِاللَّهِ إِنَّهُمْ لَمِنكُمْ وَمَا هُم مِّنكُمْ وَلَٰكِنَّهُمْ قَوْمٌ يَفْرَقُونَ
"நாங்களும் உங்களைச் சேர்ந்தவர்கள்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் உங்களைச் சேர்ந்தோர் அல்லர். மாறாக அவர்கள் பயந்த சமுதாயத்தினர்.
திருக்குர்ஆன் 9:56
وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ ۙ لَا يَبْعَثُ اللَّهُ مَن يَمُوتُ ۚ بَلَىٰ وَعْدًا عَلَيْهِ حَقًّا وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
இறந்தோரை அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே உறுதியாக சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறில்லை! இது அவனது உண்மையான வாக்குறுதி. எனினும் அதிகமான மனிதர்கள் அறிய மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:38
وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ أَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ ۖ قُل لَّا تُقْسِمُوا ۖ طَاعَةٌ مَّعْرُوفَةٌ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
(முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்கின்றனர். "சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 24:53
وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءَهُمْ نَذِيرٌ لَّيَكُونُنَّ أَهْدَىٰ مِنْ إِحْدَى الْأُمَمِ
தங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தால் எந்த ஒரு சமுதாயத்தையும் விட தாங்கள் நேர்வழி பெற்றோராக ஆவோம் என அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தார்கள்.
திருக்குர்ஆன் 35:42
குர்ஆன் வசனம் 525
﷽ குர்ஆன் வசனம் 525
12-08-2023 சனிக்கிழமை
اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىۡءٍ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىۡءٍ وَّكِيۡلٌ
அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன்.
[அல்குர்ஆன் 39:62]
உபதேசம் : 775
﷽ உபதேசம் : 775
12-08-2023 சனிக்கிழமை
"ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது தோள்புஜத்தின் மீது வைக்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும், ஸுஜுது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்து விடும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இப்னு ஹிப்பான் - 1734
பாவமன்னிப்பு. ( 7 )
பாவமன்னிப்பு. ( 7 )
தமக்காக பாவமன்னிப்புத் தேடுதல்.
الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' என்று அவர்கள் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 3:16
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 3:135
وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَن قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!' என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.
திருக்குர்ஆன் 3:147
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!'
(என்றும் கூறுவார்கள்.)
திருக்குர்ஆன் 3:193
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
திருக்குர்ஆன் 51:18
Friday, August 11, 2023
குர்ஆன் வசனம் 524
﷽ குர்ஆன் வசனம் 524
11-08-2023 வெள்ளிக்கிழமை
وَيُنَجِّىۡ اللّٰهُ الَّذِيۡنَ اتَّقَوۡا بِمَفَازَتِهِمۡ لَا يَمَسُّهُمُ السُّوۡٓءُ وَلَا هُمۡ يَحۡزَنُوۡنَ
(தன்னை) அஞ்சியோரை வெற்றி பெறச் செய்து அல்லாஹ் காப்பாற்றுவான். அவர்களுக்குத் தீங்கு ஏற்படாது. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 39:61]
உபதேசம் : 774
﷽ உபதேசம் : 774
11-08-2023 வெள்ளிக்கிழமை
"மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) புகாரி - 6168
மூடநம்பிக்கை. ( 4 )
மூடநம்பிக்கை. ( 4 )
மூட நம்பிக்கை ஷைத்தான் வேலை.
لَّعَنَهُ اللَّهُ ۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَّفْرُوضًا وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّه
அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். "உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்.
திருக்குர்ஆன் 4:118,119
وَمِنَ الْأَنْعَامِ حَمُولَةً وَفَرْشًا ۚ كُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
கால்நடைகளில் சுமப்பவற்றையும், சுமக்காதவற்றையும் (அவன் படைத்தான்). அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
திருக்குர்ஆன் 6:142
وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُم بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَعِدْهُمْ ۚ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا
உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
திருக்குர்ஆன் 17:64
கோலத்தை மாற்றுவது ஷைத்தான் வேலை.
وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ
அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;
அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்.
திருக்குர்ஆன் 4:119
திருவுளச்சீட்டு.
وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ
பலி பீடங்களில்
அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
திருக்குர்ஆன் 5:3
பாவமன்னிப்பு. ( 6 )
பாவமன்னிப்பு. ( 6 )
பாவமன்னிப்புக் கேட்க மிக ஏற்ற நேரம்.
الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ
பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், கட்டுப்பட்டோராகவும், செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவோராகவும் (இருப்பார்கள்.)
திருக்குர்ஆன் 3:17
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
திருக்குர்ஆன் 51:18
வானவர்கள் மனிதர்களுகாக பாவமன்னிப்பு தேடுகின்றனர்
فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ
எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாயாக!'' என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.
திருக்குர்ஆன் 40:7
تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِن فَوْقِهِنَّ ۚ وَالْمَلَائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَن فِي الْأَرْضِ ۗ أَلَا إِنَّ اللَّهَ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
வானங்கள் அவற்றின் மேற்புறத்திலிருந்து பிளந்து விட முயலும். வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வே மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 42:5
முஸ்லிமை துன்புறுத்தினால் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் துன்புறுத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்தின் வேதனை இருக்கிறது. பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
திருக்குர்ஆன் 85:10
குர்ஆன் வசனம் 523
﷽ குர்ஆன் வசனம் 523
10-08-2023 வியாழக்கிழமை
وَيَوۡمَ الۡقِيٰمَةِ تَرَى الَّذِيۡنَ كَذَبُوۡا عَلَى اللّٰهِ وُجُوۡهُهُمۡ مُّسۡوَدَّةٌ
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோரின் முகங்களைக் கருப்பாக கியாமத் நாளில் காண்பீர்!
[அல்குர்ஆன் 39:60]
உபதேசம் : 773
﷽ உபதேசம் : 773
10-08-2023 வியாழக்கிழமை
"கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் வழிகேட்டிலேயே உள்ளார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் (ரலி) முஸ்லிம் - 3556
மூடநம்பிக்கை. ( 3 )
மூடநம்பிக்கை. ( 3 )
வானவர்கள், நபிமார்கள் மறை வானதை அறிவார்கள் என்று நம்புதல்.
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ
அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!' என்று கேட்டான்.
திருக்குர்ஆன் 2:31
قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ
"நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்' என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 2:32
يَوْمَ يَجْمَعُ اللَّهُ الرُّسُلَ فَيَقُولُ مَاذَا أُجِبْتُمْ ۖ قَالُوا لَا عِلْمَ لَنَا ۖ إِنَّكَ أَنتَ عَلَّامُ الْغُيُوبِ
தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் "உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?'' என்று கேட்பான். "எங்களுக்கு (இதுபற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர்கள் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 5:109
وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِّلَّهِ تَبَرَّأَ مِنْهُ ۚ إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.
திருக்குர்ஆன் 9:114
قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۖ إِنِّي أَعِظُكَ أَن تَكُونَ مِنَ الْجَاهِلِينَ
"நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்'' என்று அவன் கூறினான்.
திருக்குர்ஆன் 11:46
பாவமன்னிப்பு. ( 5 )
பாவமன்னிப்பு. ( 5 )
அல்லாஹ்விடம் மட்டும் பாவமன்னிப்புத் தேடுதல்.
وَاسْتَغْفِرِ اللَّهَ ۖ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:106
وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا
யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்.
திருக்குர்ஆன் 4:110
وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ ۚ إِنَّ رَبِّي رَحِيمٌ وَدُودٌ
"உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்'' (என்றார்.)
திருக்குர்ஆன் 11:90
قَالَ يَا قَوْمِ لِمَ تَسْتَعْجِلُونَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ ۖ لَوْلَا تَسْتَغْفِرُونَ اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
"என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்? அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட மாட்டீர்களா? நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் '' என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 27:46
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّئَاتِكُمْ
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும்.
திருக்குர்ஆன் 66:8
குர்ஆன் வசனம் 504
﷽ குர்ஆன் வசனம் 504
22-07-2023 சனிக்கிழமை
اَلَمۡ اَعۡهَدۡ اِلَيۡكُمۡ يٰبَنِىۡۤ اٰدَمَ اَنۡ لَّا تَعۡبُدُوا الشَّيۡطٰنَۚ اِنَّهٗ لَـكُمۡ عَدُوٌّ مُّبِيۡنٌ
ஆதமுடைய மக்களே! ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரியாவான். என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி
[அல்குர்ஆன் 36:60]
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 6 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 6 )
அல்லாஹ் வானத்தின் மீது சத்தியம் செய்தல்.
وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ
பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 51:7
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 84:16
وَالسَّمَاءِ وَالطَّارِقِ
வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 86:1
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 86:11
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
வானத்தின் மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:5
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 5 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 5 )
அல்லாஹ் திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்தல்.
وَالْقُرْآنِ الْحَكِيمِ
ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 36:2
ص ۚ وَالْقُرْآنِ ذِي الذِّكْرِ
ஸாத். அறிவுரை அடங்கிய இக்குர்ஆன் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 38:1
وَالْكِتَابِ الْمُبِينِ
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 44:2
ق ۚ وَالْقُرْآنِ الْمَجِيدِ
காஃப். மகத்தான இக்குர்ஆன் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 50:1
فِي رَقٍّ مَّنشُورٍ
விரித்து வைக்கப்பட்ட ஏட்டில் எழுதப்பட்ட புத்தகத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 52:3
இஸ்லாம். ( 11 )
இஸ்லாம். ( 11 )
மார்கத்தில் நிர்பந்தமில்லை.
لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:256
وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَن فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا ۚ أَفَأَنتَ تُكْرِهُ النَّاسَ حَتَّىٰ يَكُونُوا مُؤْمِنِينَ
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?
திருக்குர்ஆன் 10:99
قَالَ يَا قَوْمِ أَرَأَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّي وَآتَانِي رَحْمَةً مِّنْ عِندِهِ فَعُمِّيَتْ عَلَيْكُمْ أَنُلْزِمُكُمُوهَا وَأَنتُمْ لَهَا كَارِهُونَ
"என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்களுக்கு நாங்கள் அதை வற்புறுத்த முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று (நூஹ்) கேட்டார்.
திருக்குர்ஆன் 11:28
وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَاءَ فَلْيُؤْمِن وَمَن شَاءَ فَلْيَكْفُرْ
"இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது'' என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும்.
திருக்குர்ஆன் 18:29
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர்.
திருக்குர்ஆன் 88:22
உபதேசம் : 753
﷽ உபதேசம் : 753
21-07-2023 வெள்ளிக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் (வணக்க வழிபாடுகளில்) மற்ற நாட்களில் காட்டாத (அதிக) ஈடுபாட்டை, (ரமளானின்) இறுதிப்பத்து நாட்களில் காட்டுவார்கள்!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம் - 2185
குர்ஆன் வசனம் 503
﷽ குர்ஆன் வசனம் 503
21-07-2023 வெள்ளிக்கிழமை
وَالشَّمۡسُ تَجۡرِىۡ لِمُسۡتَقَرٍّ لَّهَا ؕ ذٰلِكَ تَقۡدِيۡرُ الۡعَزِيۡزِ الۡعَلِيۡمِؕ
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.
[அல்குர்ஆன் 36:38]
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 4 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 4 )
அல்லாஹ் வானவர்கள் மீது சத்தியம் செய்தல்.
وَالصَّافَّاتِ صَفًّا
அணி அணியாய் நிற்போர் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 37:1
فَالْمُقَسِّمَاتِ أَمْرًا
கட்டளைகளைப் பங்கிடுவோர் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 51:4
وَالنَّازِعَاتِ غَرْقًا
பலமாகக் கைப்பற்றுவோர் (வானவர்கள்) மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 79:1
وَالنَّاشِطَاتِ نَشْطًا
எளிதாகக் கைப்பற்றுவோர் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 79:2
فَالْمُدَبِّرَاتِ أَمْرًا
நீந்திச் செல்வோர் மீதும், முந்திச் செல்வோர் மீதும், காரியங்களை நிர்வாகிப்போர் மீதும் ஆணையாக!
திருக்குர்ஆன் 79:5
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 3 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 3 )
அல்லாஹ் தன் மீது சத்தியம் செய்தல்.
فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ
உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.
திருக்குர்ஆன் 15:92,93
فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا
உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம்.
திருக்குர்ஆன் 19:68
فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِّثْلَ مَا أَنَّكُمْ تَنطِقُونَ
வானம் மற்றும் பூமியின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசுகிறீர்கள் என்பது (உண்மையாக இருப்பது) போல் இது உண்மை.
திருக்குர்ஆன் 51:23
فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ عَلَىٰ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன். அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்போர் அல்லர்.
திருக்குர்ஆன் 70:40,41
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:7
அல்குர்ஆன் 62:9
بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
📖📖📖📖📖📖📖
குர்ஆன் வசனம்
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِىَ لِلصَّلٰوةِ مِنۡ يَّوۡمِ الۡجُمُعَةِ فَاسۡعَوۡا اِلٰى ذِكۡرِ اللّٰهِ وَذَرُوا الۡبَيۡعَ ؕ ذٰ لِكُمۡ خَيۡرٌ لَّـكُمۡ اِنۡ كُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
🌹🌹🌹
குர்ஆன் வசனம் 502
﷽ குர்ஆன் வசனம் 502
20-07-2023 வியாழக்கிழமை
وَاٰيَةٌ لَّهُمُ الَّيۡلُ ۖۚ نَسۡلَخُ مِنۡهُ النَّهَارَ فَاِذَا هُمۡ مُّظۡلِمُوۡنَۙ
இரவும் அவர்களுக்கு ஒரு சான்றாகும். அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.
[அல்குர்ஆன் 36:37]
உபதேசம் : 752
﷽ உபதேசம் : 752
20-07-2023 வியாழக்கிழமை
''அல்லாஹ்வின் பாதையில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ அவரை நரகை விட்டும் அல்லாஹ் விலக்குகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாா்கள்.
அறிவிப்பவர் : அபூ அபஸ் (ரலி) புகாரி - 907
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 2 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 2 )
அல்லாஹ்வுக்காக மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும்.
وَمَا أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ ۗ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.
திருக்குர்ஆன் 2:270
فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا ۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَٰنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا
நீர், உண்டு பருகி மனநிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் "நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 19:26
சத்தியம் செய்தால் நிறைவேற்ற வேண்டும்.
وَلَا تَجْعَلُوا اللَّهَ عُرْضَةً لِّأَيْمَانِكُمْ أَن تَبَرُّوا وَتَتَّقُوا وَتُصْلِحُوا بَيْنَ النَّاسِ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:224
لَّا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன்.
திருக்குர்ஆன் 2:225
لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ الْأَيْمَانَ
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.
திருக்குர்ஆன் 5:89
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 1 )
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 1 )
அல்லாஹ்வின் பெயரால் மட்டும் சத்தியம் செய்தல்.
وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءَتْهُمْ آيَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَا ۚ قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ اللَّهِ ۖ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ
"எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்'' என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன எனக் கூறுவீராக! "அது நிகழும்போது அவர்கள் நம்ப மாட்டார்கள்'' என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
திருக்குர்ஆன் 6:109
وَيَحْلِفُونَ بِاللَّهِ إِنَّهُمْ لَمِنكُمْ وَمَا هُم مِّنكُمْ وَلَٰكِنَّهُمْ قَوْمٌ يَفْرَقُونَ
"நாங்களும் உங்களைச் சேர்ந்தவர்கள்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் உங்களைச் சேர்ந்தோர் அல்லர். மாறாக அவர்கள் பயந்த சமுதாயத்தினர்.
திருக்குர்ஆன் 9:56
وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ ۙ لَا يَبْعَثُ اللَّهُ مَن يَمُوتُ ۚ بَلَىٰ وَعْدًا عَلَيْهِ حَقًّا وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
இறந்தோரை அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே உறுதியாக சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறில்லை! இது அவனது உண்மையான வாக்குறுதி. எனினும் அதிகமான மனிதர்கள் அறிய மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:38
وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ أَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ ۖ قُل لَّا تُقْسِمُوا ۖ طَاعَةٌ مَّعْرُوفَةٌ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
(முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்கின்றனர். "சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 24:53
وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءَهُمْ نَذِيرٌ لَّيَكُونُنَّ أَهْدَىٰ مِنْ إِحْدَى الْأُمَمِ
தங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தால் எந்த ஒரு சமுதாயத்தையும் விட தாங்கள் நேர்வழி பெற்றோராக ஆவோம் என அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தார்கள்.
திருக்குர்ஆன் 35:42
குர்ஆன் வசனம் 501
﷽குர்ஆன் வசனம் 501
19-07-2023 புதன்கிழமை
وَلَوۡ يُـؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِمَا كَسَبُوۡا مَا تَرَكَ عَلٰى ظَهۡرِهَا مِنۡ دَآ بَّةٍ وَّلٰـكِنۡ يُّؤَخِّرُهُمۡ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمۡ فَاِنَّ اللّٰهَ كَانَ بِعِبَادِهٖ بَصِيۡرً
மனிதர்களை அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாகக் குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும்போது அல்லாஹ் தனது அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான்.
[அல்குர்ஆன் 35:45]
உபதேசம் : 751
﷽ உபதேசம் : 751
19-07-2023 புதன்கிழமை
நோன்பாளியிடம் ஏற்பட்ட வீணான செயல்களை விட்டும் அவரைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் ஃபித்ரா தர்மத்தை நபி (ஸல்) அவா்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் - 137
பாவமன்னிப்பு. ( 7 )
பாவமன்னிப்பு. ( 7 )
தமக்காக பாவமன்னிப்புத் தேடுதல்.
الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' என்று அவர்கள் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 3:16
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 3:135
وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَن قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!' என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.
திருக்குர்ஆன் 3:147
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!'
(என்றும் கூறுவார்கள்.)
திருக்குர்ஆன் 3:193
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
திருக்குர்ஆன் 51:18
பாவமன்னிப்பு. ( 6 )
பாவமன்னிப்பு. ( 6 )
பாவமன்னிப்புக் கேட்க மிக ஏற்ற நேரம்.
الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ
பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், கட்டுப்பட்டோராகவும், செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவோராகவும் (இருப்பார்கள்.)
திருக்குர்ஆன் 3:17
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
திருக்குர்ஆன் 51:18
வானவர்கள் மனிதர்களுகாக பாவமன்னிப்பு தேடுகின்றனர்
فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ
எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாயாக!'' என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.
திருக்குர்ஆன் 40:7
تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِن فَوْقِهِنَّ ۚ وَالْمَلَائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَن فِي الْأَرْضِ ۗ أَلَا إِنَّ اللَّهَ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
வானங்கள் அவற்றின் மேற்புறத்திலிருந்து பிளந்து விட முயலும். வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வே மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 42:5
முஸ்லிமை துன்புறுத்தினால் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் துன்புறுத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்தின் வேதனை இருக்கிறது. பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
திருக்குர்ஆன் 85:10
உபதேசம் : 750
﷽ உபதேசம் : 750
18-07-2023 செவ்வாய்க்கிழமை
"ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும்பொழுது அதை செய்தவரிடம் 'ஜஸாக்கல்லாஹு கைா்' (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) எனக் கூறினால் அவர் நிறைவாகப் புகழ்ந்தவராகிவிடுவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ரலி) திர்மிதீ - 1958
குர்ஆன் வசனம் 500
﷽ குர்ஆன் வசனம் 500
18-07-2023 செவ்வாய்க்கிழமை
اِنۡ اَنۡتَ اِلَّا نَذِيۡرٌ
நீர் எச்சரிக்கை செய்பவர் தவிர வேறில்லை.
[அல்குர்ஆன் 35:23]
உபதேசம் : 749
﷽ உபதேசம் : 749
17-07-2023 திங்கட்கிழமை
"இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பித்து வரும்பொழுது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். உலகில் அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காக அங்கு கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து தூய்மையான நிலையில் சொர்க்கம் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) புகாரி - 2440
குர்ஆன் வசனம் 499
﷽ குர்ஆன் வசனம் 499
17-07-2023 திங்கட்கிழமை
وَ لَا تَزِرُ وَازِرَةٌ وِّزۡرَ اُخۡرَىٰ
ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்.
[அல்குர்ஆன் 35:18]
உபதேசம் : 748
﷽ உபதேசம் : 748
16-07-2023 ஞாயிற்றுக்கிழமை
ரமளானின் இறுதிப்பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை துண்டித்துக் கொள்வார்கள்; அல்லாஹ்வைத் தொழுது இரவை உயிர்ப்பிப்பார்கள்; இறைவனை வணங்குவதற்காகத் தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்.
அறிவிப்பவா்: ஆயிஷா (ரலி) புகாரி : 2024
குர்ஆன் வசனம் 498
﷽ குர்ஆன் வசனம் 498
يٰۤاَيُّهَا النَّاسُ اَنۡتُمُ الۡفُقَرَآءُ اِلَى اللّٰهِۚ وَاللّٰهُ هُوَ الۡغَنِىُّ الۡحَمِيۡدُ
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.
[அல்குர்ஆன் 35:15]
குர்ஆன் வசனம் 497
﷽ குர்ஆன் வசனம் 497
15-07-2023 சனிக்கிழமை
தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.
[அல்குர்ஆன் 35:8]
உபதேசம் : 747
﷽ உபதேசம் : 747
15-07-2023 சனிக்கிழமை
"ஒரு முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும்! அவனுடன் போரிடுவது (அல்லது அவனைக் கொலை செய்வது) இறைமறுப்பாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) முஸ்லிம் - 116
உபதேசம் : 746
﷽ உபதேசம் : 746
14-07-2023 வெள்ளிக்கிழமை
"அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் புரியச் செல்லும்பொழுது) ஒருநாள் நோன்பு நோற்கும் அடியானுக்கு அதற்குப்பகரமாக அவனுடைய முகத்தை நரகிலிருந்து 70 ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அல்லாஹ் அப்புறப்படுத்தாமல் இருப்பதில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) முஸ்லிம் - 2122
குர்ஆன் வசனம் 496
﷽ குர்ஆன் வசனம் 496
14-07-2023 வெள்ளிக்கிழமை
اِنَّ الشَّيۡطٰنَ لَـكُمۡ عَدُوٌّ فَاتَّخِذُوۡهُ عَدُوًّا ؕ اِنَّمَا يَدۡعُوۡا حِزۡبَهٗ لِيَكُوۡنُوۡا مِنۡ اَصۡحٰبِ السَّعِيۡرِؕ
ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
[அல்குர்ஆன் 35:6]
குர்ஆன் வசனம் 495
﷽ குர்ஆன் வசனம் 495
13-07-2023 வியாழக்கிழமை
يٰۤـاَيُّهَا النَّاسُ اِنَّ وَعۡدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الۡحَيٰوةُ الدُّنۡيَا وَلَا يَغُرَّنَّكُمۡ بِاللّٰهِ الۡغَرُوۡرُ
மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
[அல்குர்ஆன் 35:5]
உபதேசம் : 745
﷽ உபதேசம் : 745
13-07-2023 வியாழக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிக்கும் வரை சுப்ஹு தொழுத இடத்திலிருந்து எழமாட்டார்கள்! சூரியன் உதயமான பிறகே (அங்கிருந்து) எழுவார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிா் (ரலி) அபூதாவூத் - 1294
உபதேசம் : 744
﷽ உபதேசம் : 744
12-07-2023 புதன்கிழமை
"50 பெண்களுக்கு ஒரே ஒரு ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகமாவதும் மறுமை நாளுடைய அடையாளமாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாரி - 6808
குர்ஆன் வசனம் 494
﷽ குர்ஆன் வசனம் 494
12-07-2023 புதன்கிழமை
يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوۡلُوۡا قَوۡلًا سَدِيۡدًا ۙ ﴿۷۰﴾
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!
[அல்குர்ஆன் 33:70]
குர்ஆன் வசனம் 493
﷽ குர்ஆன் வசனம் 493
11-07-2023 செவ்வாய்க்கிழமை
يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزۡوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الۡمُؤۡمِنِيۡنَ يُدۡنِيۡنَ عَلَيۡهِنَّ مِنۡ جَلَابِيۡبِهِنَّ ؕ ذٰلِكَ اَدۡنٰٓى اَنۡ يُّعۡرَفۡنَ فَلَا يُؤۡذَيۡنَ
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.
[அல்குர்ஆன் 33:59]
உபதேசம் : 743
﷽ உபதேசம் : 743
11-07-2023 செவ்வாய்க்கிழமை
"நிச்சயமாக! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு! என்னுடைய சமுதாயத்திற்கான சோதனை செல்வம் ஆகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : கஅப் இப்னு இயாள் (ரலி) திர்மிதீ - 2270
உபதேசம் : 742
﷽ உபதேசம் : 742
10-07-2023 திங்கட்கிழமை
"காய்ச்சலை ஏசாதே! ஏனெனில் கொல்லனின் உலை இரும்பின் துருவை அகற்றுவதைப் போன்று காய்ச்சல் ஆதமுடைய மக்களின் (மனிதர்களின்) தவறுகளை அகற்றி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் - 5031
குர்ஆன் வசனம் 492
﷽ குர்ஆன் வசனம் 492
10-07-2023 திங்கட்கிழமை
وَالَّذِيۡنَ يُؤۡذُوۡنَ الۡمُؤۡمِنِيۡنَ وَالۡمُؤۡمِنٰتِ بِغَيۡرِ مَا اكۡتَسَبُوۡا فَقَدِ احۡتَمَلُوۡا بُهۡتَانًا وَّاِثۡمًا مُّبِيۡنًا
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.
[அல்குர்ஆன் 33:58]
குர்ஆன் வசனம் 491
﷽ குர்ஆன் வசனம் 491
09-07-2023 ஞாயிற்றுக்கிழமை
اِنَّ الَّذِيۡنَ يُؤۡذُوۡنَ اللّٰهَ وَرَسُوۡلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِى الدُّنۡيَا وَالۡاٰخِرَةِ وَاَعَدَّ لَهُمۡ عَذَابًا مُّهِيۡنًا
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தொந்தரவு செய்வோரை இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். அவர்களுக்கு இழிவு தரும் வேதனையையும் தயாரித்துள்ளான்.
[அல்குர்ஆன் 33:57]
உபதேசம் : 741
﷽ உபதேசம் : 741
09-07-2023 ஞாயிற்றுக்கிழமை
"இரும்பாலான ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்பவர் அதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி) புகாரி - 1363
உபதேசம் : 740
﷽ உபதேசம் : 740
08-07-2023 சனிக்கிழமை
"ஒருவா் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்பொழுது (நான் சொல்வது பொய்யென்றால்) நான் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறினால் அவா் தான் கூறியது போன்றே (வேறு மார்க்கத்தில்) உள்வராகிவிடுவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி) புகாரி - 1363
குர்ஆன் வசனம் 490
﷽ குர்ஆன் வசனம் 490
08-07-2023 சனிக்கிழமை
وَاللّٰهُ اَحَقُّ اَنۡ تَخۡشٰٮهُ
நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன்.
[அல்குர்ஆன் 33:37]
உபதேசம் : 739
﷽ உபதேசம் : 739
07-07-2023 வெள்ளிக்கிழமை
"நோன்பும் குர்ஆனும் மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்துரை செய்யும். 'நான் இந்த அடியானை உணவு மற்றும் இச்சைகளை விட்டுத் தடுத்தேன்! எனவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்பாயாக!" என்று நோன்பு கூறும். "இரவில் இவனைத் தூங்கவிடாமல் தடுத்தேன்! எனவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்பாயாக!" எனக் குா்ஆன் கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அஹ்மத் - 6589
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...