பாவமன்னிப்பு. ( 5 )
அல்லாஹ்விடம் மட்டும் பாவமன்னிப்புத் தேடுதல்.
وَاسْتَغْفِرِ اللَّهَ ۖ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:106
وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا
யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்.
திருக்குர்ஆன் 4:110
وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ ۚ إِنَّ رَبِّي رَحِيمٌ وَدُودٌ
"உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்'' (என்றார்.)
திருக்குர்ஆன் 11:90
قَالَ يَا قَوْمِ لِمَ تَسْتَعْجِلُونَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ ۖ لَوْلَا تَسْتَغْفِرُونَ اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
"என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்? அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட மாட்டீர்களா? நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் '' என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 27:46
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّئَاتِكُمْ
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும்.
திருக்குர்ஆன் 66:8
Friday, August 11, 2023
பாவமன்னிப்பு. ( 5 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment