Monday, March 18, 2024

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 22 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 22 )
பள்ளி சென்றால் பாவ மன்னிப்பு.

ஹும்ரான் இப்னு அபான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(மதீனாவிலுள்ள) 'மகாயித்' எனுமிடத்தில் அமர்ந்திருந்த உஸ்மான்(ரலி) அவர்களிடம் நான் தண்ணீருடன் சென்றேன். அப்போது அவர்கள் பரிபூரணமாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். பிறகு 'நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் பரிபூரணமாக அங்கசுத்தி செய்யக் கண்டேன்' என்று கூறிவிட்டு, 'யார் இதைப் போன்று (முழுமையாக) அங்கசுத்தி செய்து, பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அமருவாரோ அவர் அதற்கு முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6433.

No comments:

Post a Comment