Saturday, March 30, 2024

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 33 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 33 )
வீட்டில் உளூச் செய்தல்.

அனஸ்(ரலி) அறிவித்தார்.
(ஒருமுறை) தொழுகை நேரம் வந்தது. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் வீடு அமைந்திருந்தவர்களெல்லாம் உளூச் செய்ய எழுந்தனர். (பள்ளிவாசல் அருகில் வீடில்லாத) ஒரு கூட்டத்தார் (உளூச் செய்ய வழியறியாமல்) எஞ்சியிருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் தண்ணீருள்ள கல்லால் ஆன ஏனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் (அதில்) தம் கையை வைத்(துப் பார்த்)தார்கள். அதில் நபி(ஸல்) தம் கரத்தை விரித்து வைக்கும் அளவுக்கு அந்தக்கல் ஏனம் பெரிதாக இருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் விரல்களை இணைத்து கல் ஏனத்தில் வைத்தார்கள். மக்கள் அனைவரும் (அதிலிருந்து) உளூச் செய்தனர்.
ஸஹீஹ் புகாரி : 3575.

No comments:

Post a Comment