வானவர்களின் பணிகள். ( 12 )
வானவர்கள் சொர்க்கவாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள்.
جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ
அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள்.
திருக்குர்ஆன் 13:23
ادْخُلُوهَا بِسَلَامٍ آمِنِينَ
அச்சமற்று நிம்மதியுடன் இதில் நுழையுங்கள்!'' (என்று கூறப்படும்).
திருக்குர்ஆன் 15:46
لَا يَحْزُنُهُمُ الْفَزَعُ الْأَكْبَرُ وَتَتَلَقَّاهُمُ الْمَلَائِكَةُ هَٰذَا يَوْمُكُمُ الَّذِي كُنتُمْ تُوعَدُونَ
மாபெரும் திடுக்கம் அவர்களைக் கவலையில் ஆழ்த்தாது. வானவர்கள் அவர்களை எதிர்கொள்வார்கள். "இதுவே உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள்1'' (எனக் கூறுவார்கள்).
திருக்குர்ஆன் 21:103
نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ
இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை அங்கே உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் அங்கே உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.
திருக்குர்ஆன் 41:31,32
أُولَٰئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ فَوَاكِهُ ۖ وَهُم مُّكْرَمُون فِي جَنَّاتِ النَّعِيمِ
இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 37:41,42,43
No comments:
Post a Comment