Thursday, January 5, 2023

நூல் : முஸ்லிம் 4832

 . 🌀🌀🌀🌀🌀🌀🌀

ஹதீஸ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

(இறுதியாக) நோயுற்று விடுகின்ற எந்த ஓர் இறைத் தூதருக்கும் உலக வாழ்வு - மறுமை வாழ்வு

ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில்லை என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் (உயிர்) கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின்போது அவர்களின் குரல் கடுமையாகக் (கட்டிக் கொண்டு) கம்மிப் போய்விட்டது.

அப்போது அவர்கள், “அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், நல்லோருடன் (என்னை சொர்க்கத்தில் சேர்த்தருள்)” என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்.

(இதிலிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 4832

No comments:

Post a Comment