கியாமத் நாள் அடையாளம். ( 5 )
மலைகள் பூமியுடன் சேர்த்து தூக்கி எறியப்படும். பின்னர் ஒன்றோடு ஒன்று மோதித் தூள் தூளாகி விடும்.وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّي نَسْفًا
(முஹம்மதே!) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "என் இறைவன் அவற்றைத் தூள் தூளாக்குவான்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 20:105
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا
பூமி ஒரேயடியாக அசைக்கப்படும் போது, மலைகள் தூள் தூளாக்கப்படும் போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.
திருக்குர்ஆன் 56:4, 5, 6
يَوْمَ تَرْجُفُ الْأَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيبًا مَّهِيلًا
பூமியும், மலைகளும் அந்நாளில் ஆட்டம் காணும். மலைகள் மண் குவியலாகி விடும்.
திருக்குர்ஆன் 73:14
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ
மலைகள் சிதறடிக்கப்படும் போது,
திருக்குர்ஆன் 77:10
وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராக ஆகும்.
திருக்குர்ஆன் 78:20
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
மலைகள் பெயர்க்கப்படும் போது,
திருக்குர்ஆன் 81:3
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.
திருக்குர்ஆன் 101:5
No comments:
Post a Comment