لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فِي الرَّفِيقِ الأَعْلَى
லாயிலாஹ இல்லல்லாஹ், ஃபிர் ரஃபீகில் அஃலா.
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. மிகச் சிறந்த நண்பனை நோக்கி…
சிறப்பு : மரணத்தை நெருங்கியவர் கடைசியாக லாயிலாஹ இல்லல்லாஹ். என்ற கலிமாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசிச் சொல்லாக இந்தக் கொள்கைப் பிரகடனம் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆதாரம் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தை நெருங்கிய போது தமது கைகளைத் தண்ணீருக்குள் விட்டு முகத்தில் தடவிக் கொண்டு லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) மரணத்தினால் கடும் துன்பம் ஏற்படுகிறது எனக் கூறினார்கள். பின்னர் தமது கைகளை ஊன்றி ஃபிர் ரஃபீகில் அஃலா (மிகச் சிறந்த நண்பனை நோக்கி…) என்று கூறிக் கொண்டிருக்கும் போது உயிர் கைப்பற்றப்பட்டது. அவர்களின் கை சாய்ந்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6510
No comments:
Post a Comment