லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 12 )
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
லாயிலாஹ இல்லல்லாஹ்.
பொருள் : வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
சிறப்பு : மரணிப்பவரின் கடைசி பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விட்டால், அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார்.
ஆதாரம் : உங்களில் மரணிக்க உள்ளவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசி பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். இதற்குமுன் அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே’ என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னு ஹிப்பான்-3004 (7/272)
No comments:
Post a Comment