கியாமத் நாள் அடையாளம். ( 1 )
வானம் சுருட்டப்பட்டு விடும்.يَوْمَ نَطْوِي السَّمَاءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ ۚ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ ۚ وَعْدًا عَلَيْنَا ۚ إِنَّا كُنَّا فَاعِلِينَ
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
திருக்குர்ஆன் 21:104
وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا
(அது) மேகத்தால் வானம் பிளக்கப்பட்டு, வானவர்கள் உறுதியாக இறக்கி வைக்கப்படும் நாள்!
திருக்குர்ஆன் 25:25
فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُّبِينٍ
வானம் தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக!
திருக்குர்ஆன் 44:10
يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا
அந்நாளில் வானம் சுற்றிச் சுழலும்.
திருக்குர்ஆன் 52:9
فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
வானம் பிளக்கும்போது எண்ணெய்யைப் போல் சிவந்ததாக ஆகும்.
திருக்குர்ஆன் 55:37
وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ
வானம் பிளந்து விடும். அன்று அது உறுதியற்றதாக இருக்கும்.
திருக்குர்ஆன் 69:16
يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ
அந்நாளில் வானம் உருக்கிய செம்பு போல் ஆகும்.
திருக்குர்ஆன் 70:8
السَّمَاءُ مُنفَطِرٌ بِهِ ۚ كَانَ وَعْدُهُ مَفْعُولًا
அதில் வானம் வெடித்து விடும். அவனது வாக்குறுதி செய்து முடிக்கப்படும்.
திருக்குர்ஆன் 73:18
وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும்.
திருக்குர்ஆன் 78:19
No comments:
Post a Comment