Saturday, December 10, 2022

இறுதி நாளை நம்புதல். ( 2 )

 இறுதி நாளை நம்புதல். ( 2 )

திடீரென்று கண்மூடித் திறப்பதற்குள்.

قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا بِلِقَاءِ اللَّهِ ۖ حَتَّىٰ إِذَا جَاءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوا يَا حَسْرَتَنَا عَلَىٰ مَا فَرَّطْنَا فِيهَا وَهُمْ يَحْمِلُونَ أَوْزَارَهُمْ عَلَىٰ ظُهُورِهِمْ ۚ أَلَا سَاءَ مَا يَزِرُونَ

அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யெனக் கருதியோர் நட்டமடைந்து விட்டனர். திடீரென யுகமுடிவு நேரம் அவர்களிடம் வரும் போது "உலகில் வரம்பு மீறி நடந்து கொண்டதால் எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே'' என்று கூறுவார்கள். தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பார்கள். கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டது.
திருக்குர்ஆன் 6:31

أَفَأَمِنُوا أَن تَأْتِيَهُمْ غَاشِيَةٌ مِّنْ عَذَابِ اللَّهِ أَوْ تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ

சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வருவதைப் பற்றியோ, அவர்கள் அறியாத நிலையில் திடீரென யுகமுடிவு நேரம் வந்து விடுவதைப் பற்றியோ அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?
திருக்குர்ஆன் 12:107

وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَمَا أَمْرُ السَّاعَةِ إِلَّا كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. யுகமுடிவு நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
திருக்குர்ஆன் 16:77

بَلْ تَأْتِيهِم بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا يَسْتَطِيعُونَ رَدَّهَا وَلَا هُمْ يُنظَرُونَ

மாறாக, அது அவர்களிடம் திடீரென்று வந்து அவர்களைத் திகைக்க வைக்கும். அதைத் தடுக்க அவர்களுக்கு இயலாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 21:40

وَلَا يَزَالُ الَّذِينَ كَفَرُوا فِي مِرْيَةٍ مِّنْهُ حَتَّىٰ تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً أَوْ يَأْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيمٍ

அவர்களிடம் யுகமுடிவு நேரம் திடீரென வரும் வரை, அல்லது பயனளிக்காத நாளின் வேதனை அவர்களுக்கு வரும் வரை (ஏகஇறைவனை) மறுப்போர் அதில் சந்தேகத்திலேயே இருந்து வருவார்கள்.
திருக்குர்ஆன் 22:55

هَلْ يَنظُرُونَ إِلَّا السَّاعَةَ أَن تَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ

அவர்கள் உணராத நிலையில் திடீரென்று யுகமுடிவு நேரம் அவர்களிடம் வருவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?
திருக்குர்ஆன் 43:66

فَهَلْ يَنظُرُونَ إِلَّا السَّاعَةَ أَن تَأْتِيَهُم بَغْتَةً ۖ فَقَدْ جَاءَ أَشْرَاطُهَا ۚ فَأَنَّىٰ لَهُمْ إِذَا جَاءَتْهُمْ ذِكْرَاهُمْ

யுகமுடிவு நேரம் திடீரென தங்களிடம் வருவதைத் தவிர வேறெதனையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அதன் அடையாளங்கள் வந்து விட்டன. அது அவர்களிடம் வரும் போது அவர்கள் படிப்பினை பெறுவது எப்படி?
திருக்குர்ஆன் 47:18

No comments:

Post a Comment