Wednesday, December 21, 2022

லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 19 )

 லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 19 )


لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ

லாயிலாஹ இல்லல்லாஹ்.

பொருள் : வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

சட்டம் : அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுளின் மீது சத்தியம் செய்தால், லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூற வேண்டும்.

ஆதாரம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக்கால தெய்வச் சிலைகளான) 'லாத்'தின் மீதும் 'உஸ்ஸா'வின் மீதும் சத்தியமாக என்று கூறிவிட்டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லாயிலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லட்டும். தம் நண்பனிடம், 'வா சூதாடுவோம்' என்று கூறியவர் (அதற்குப் பரிகாரமாக எதையேனும்) தர்மம் செய்யட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6301.

No comments:

Post a Comment