Thursday, December 8, 2022

இறுதி நாளை நம்புதல். ( 1 )

 இறுதி நாளை நம்புதல். ( 1 )

அந்த நாள் தொலைவில் இல்லை திடீரென்று ஏற்படும்.

أَوْ خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِي صُدُورِكُمْ ۚ فَسَيَقُولُونَ مَن يُعِيدُنَا ۖ قُلِ الَّذِي فَطَرَكُمْ أَوَّلَ مَرَّةٍ ۚ فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُءُوسَهُمْ وَيَقُولُونَ مَتَىٰ هُوَ ۖ قُلْ عَسَىٰ أَن يَكُونَ قَرِيبًا

"கல்லாகவோ, இரும்பாகவோ, அல்லது உங்கள் உள்ளங்களில் பெரிதாகத் தோன்றும் ஒரு படைப்பாகவோ ஆகுங்கள்!'' (எப்படி ஆனாலும் உயிர்ப்பிப்பான்) என்று கூறுவீராக! "எங்களை எவன் மீண்டும் படைப்பான்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். "முதல் தடவை உங்களை யார் படைத்தானோ அவன் (மீண்டும் படைப்பான்)'' என்று கூறுவீராக! உம்மிடம் தங்கள் தலைகளைச் சாய்த்து, "அது எப்போது வரும்?'' என்று கேட்கின்றனர். "அது சமீபத்தில் வரக் கூடும்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:51

وَاقْتَرَبَ الْوَعْدُ الْحَقُّ فَإِذَا هِيَ شَاخِصَةٌ أَبْصَارُ الَّذِينَ كَفَرُوا يَا وَيْلَنَا قَدْ كُنَّا فِي غَفْلَةٍ مِّنْ هَٰذَا بَلْ كُنَّا ظَالِمِينَ

உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது (ஏகஇறைவனை) மறுத்தோரின் பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். "எங்களுக்குக் கேடு தான். நாங்கள் இது பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை! நாங்கள் அநீதி இழைத்தோம்'' (என்று கூறுவார்கள்).
திருக்குர்ஆன் 21:97

يَسْأَلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ اللَّهِ ۚ وَمَا يُدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ تَكُونُ قَرِيبًا

(முஹம்மதே!) யுகமுடிவு நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். "அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனக் கூறுவீராக! யுகமுடிவு நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?
திருக்குர்ஆன் 33:63

اللَّهُ الَّذِي أَنزَلَ الْكِتَابَ بِالْحَقِّ وَالْمِيزَانَ ۗ وَمَا يُدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ قَرِيبٌ

அல்லாஹ்வே உண்மையை உள்ளடக்கிய வேதத்தையும், தராசையும் அருளினான். யுகமுடிவு நேரம் அருகில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?
திருக்குர்ஆன் 42:17

فَهَلْ يَنظُرُونَ إِلَّا السَّاعَةَ أَن تَأْتِيَهُم بَغْتَةً ۖ فَقَدْ جَاءَ أَشْرَاطُهَا ۚ فَأَنَّىٰ لَهُمْ إِذَا جَاءَتْهُمْ ذِكْرَاهُمْ

யுகமுடிவு நேரம் திடீரென தங்களிடம் வருவதைத் தவிர வேறெதனையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அதன் அடையாளங்கள் வந்து விட்டன. அது அவர்களிடம் வரும் போது அவர்கள் படிப்பினை பெறுவது எப்படி?
திருக்குர்ஆன் 47:18

اقْتَرَبَتِ السَّاعَةُ وَانشَقَّ الْقَمَرُ

யுகமுடிவு நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.
திருக்குர்ஆன் 54:1

إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا

சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏகஇறைவனை) மறுப்பவன் கூறுவான்.
திருக்குர்ஆன் 78:40

No comments:

Post a Comment