லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 6 )
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர். அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்.
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.
சிறப்பு : ஒருவர் தனியாக இருக்கும் போது பாங்கு சொன்னால், இயற்கை மார்க்கத்தில் (இஸ்லாத்தில்) உள்ளார். நரகத்திலிருந்து தப்பித்து விட்டார்.
ஆதாரம் : நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஒருவர் சொன்னதைச் செவியுற்றோம். (இதைச் செவியுற்ற) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் இயற்கை மார்க்கத்தில் உள்ளார் என்றார்கள். அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறிய போது இவர் நரகிலிருந்து தப்பித்து விட்டார் என்றார்கள். உடனே நாங்கள் அவரிடம் விரைந்து சென்றோம். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். தொழுகை நேரம் வந்தவுடன் அதற்காக பாங்கு கூறியுள்ளார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : அஹ்மது 3667.
No comments:
Post a Comment