Tuesday, December 6, 2022

உபதேசம் 527

 ﷽ உபதேசம் 527

05-12-2022 திங்கட்கிழமை

என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) புகாரி : 2620.

No comments:

Post a Comment